உலகநாடுகள் - சவூதிஅரேபியா
Print
 • தென்மேற்கு ஆசியாவின் அரேபியத் தீபகற்பத்தில் உள்ள நாடு.

 • பழைய நாடுகளான ஹெஜாஸ், நெஷ்டு என்ற இரு நாடுகள் சேர்ந்து அமையப்பெற்றது.

 • முடியாட்சிக்குட்பட்ட சுதந்திர நாடு

 • 1932, செப்டம்பர் 30 இல் சுதந்திரம் பெற்றுள்ளது.

 • தலைநகரம் ரியாத்.

 • நாணயம் ரியால்.

 • வலமிருந்து இடமாக எழுதும் அரேபிய மொழி பேசப்படுகிறது.

 • உலகிலேயே அதிக எண்ணெய் வளமுள்ள நாடு.

 • முஸ்லிம்கள் புனிதத் தலங்களாகக் கருதும் மெக்கா, மதினா உள்ளன.

 • மக்கள்தொகை 28.7 மில்லியன் (5.6 மில்லியன் பிறநாட்டினர்)

 • கல்வியறிவு பெற்றவர்கள் 78.8%

5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாலைவன நாடுகளில் மக்கள் பலவகையான நாகரிகங்களைக் கொண்டவர்களாக வாழ்ந்து வந்தனர். தில்முன் (Dilmun) நாகரிகத்தின் வழியாக வளைகுடா நாடுகளில் சுமேரியர்களும் தொன்மையான எகிப்தியர்களும் வந்தனர். பெரும்பாலான மன்னர்கள் பிற மாநிலங்களுடன் வளைகுடா நாடுகளில் தொழில், வணிகம் செய்து வல்லரசாகத் திகழ நினைத்தனர்.

சவுதி மாநிலம் மத்திய அரேபியாவில் முகமதுபின் சவுத் என்பவரை மன்னராகக் கொண்டு 1750 இல் தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகளாக சவுதி குடும்பம் பலமுறை எகிப்தியர்-களுடன் போர் புரிந்துள்ளது. பின்பும் பல போர்களைச் சந்தித்துள்ளது.

புதிய சவுதி அரசு மறைந்த அரசர் அப்துல் அசிஸ் அல் சவுத் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1902 இல் அல் சவுதின் அரச பரம்பரை ரியாத்தைத் தலைநகராகக் கொண்டு அல் ரசித் குடும்பத்தாரால் செயல்பட்டது. 2005 இல் அரசப் பொறுப்பை ஏற்ற அப்துல்லா, தொடர்ந்து அரசராக இருந்து வருகிறார். சமுதாய, பொருளாதார, அரசியலில் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சிறந்த முறையில் ஆட்சியினை நடத்தி வருகிறார்.

2009, செப்டம்பரில் கிங் அப்துல்லா ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (KAUST) என்று மன்னரின் பெயரில் பட்டப் படிப்பிற்கான ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவே, சவுதி அரேபியாவின் இரு பாலரும் (Co education) பயிலும் முதல் பல்கலைக்கழகமாகும்.

புவியியல் அமைப்பு

மத்திய கிழக்கில் எல்லையாக பாரசீக வளைகுடாவும் செங்கடலும் உள்ளன. வடக்கில் ஏமன் (Yeman) உள்ளது.

தட்பவெப்ப நிலை

பெரும்பாலும் பாலைவனங்களாக இருப்பதால், கோடைக்காலத்தில் (மே - செப்டம்பர்) அதிக வெப்பமாகவும், வறட்சியாகவும் இருக்கும். பகல் நேர வெப்பநிலை 90 டிகிரி. சில இடங்களில் 130 டிகிரிவரை இருக்கும். இரவில் குளிர்ச்சியாகி-விடும். குளிர்காலங்களில் வெப்ப-நிலை மிகவும் குறைந்துவிடும். மழைக் காலங்களில் மட்டுமே மழை பெய்யும்.

பொருளாதாரம்

அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 85% பெட்ரோலியப் பொருள்களே. உலகின் பெரிய எண்ணெய் நிறுவனமாக இங்குள்ள SAMAREC திகழ்கிறது. பிற நாடுகளுக்குத் தேவைப்படும் நான்கில் ஒரு பகுதி எண்ணெய் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வேளாண்மை

மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் உள்ள பாலைவனச் சோலைகளில் தேனும் பழவகை-களும் கிடைக்கின்றன. மதினாவில் பேரிச்சம்பழம் மிகுதியாகக் கிடைக்கிறது. கோதுமை, பார்லி, காபி ஆகியனவும் விளைகின்றன.

போக்குவரத்து

ஒட்டகம், கழுதை, குதிரை ஆகியன பிரயாணத்திற்குப் பயன்படுகின்றன. விமானம், தொடர்வண்டி ஆகியனவும் உள்ளன. இங்குள்ள கார்களின் டயர்கள் மணலில் செல்வதற்கேற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

கறுப்புக் கல்

காபா (Kaaba) என்னும் மசூதி மெக்காவில் உள்ளது. இம்மசூதியின் ஒரு மூலையில் கறுப்பு நிறக் கல் உள்ளது. ஆபிரகாம் மற்றும் அவரது புதல்வன் இஸ்மாயில் ஆகியோரால் இக்கல் அமைக்கப்பட்டதாக முஸ்லிம் மக்களால் நம்பப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் இக்கல் இருக்கும் திசையை நோக்கியே தங்களின் தொழுகையை மேற்கொள்கின்றனர்.

சுற்றுலாத் தலங்கள்

ஜெட்டாக் (Jeddah), கிங்ஸ் ஃபவுன்டெய்ன் (Kings fountain) டம்மாம் (Dammam), டைஃப்(Ta’if), கமிஸ் மஸ்ஹெய்ட் (Khamis mushait), மெக்கா, மதினா.


Share