ஈத்துவக்கும் இன்பப் பொங்கள் |
|
பொங்கலுக்குப் புத்தாடை வாங்க வேணும் பொழுதெல்லாம் கரும்பெல்லாம் திங்க வேணும் எங்களுக்கு இனிப்பான பொங்கல் வேணும் என்றெல்லாம் எண்ணுகின்ற தம்பி தங்காய்! தங்குதற்கு வீடுமின்றி பசியால் வாடி தளர்ந்திங்கே வீழுகின்ற மக்கள் கோடி உங்களது வீண்செலவைக் குறைத்து நீங்கள் உதவிடுதல் அவர்களுக்கு என்றும் நன்றே
ஆளுக்கோர் பிடியரிசி என்று நீங்கள் அடுத்தடுத்த நண்பரெல்லாம் ஒன்றாய்க்கூடி நாளைக்குப் பொங்கலன்று பொங்க வைத்து நலிந்தோர்க்கும் மெலிந்தோர்க்கும் அன்னதானம் தோளெடுத்துச் செய்திடுவீர்; மற்றும் உங்கள் துணிகொடுத்து அவர்களது மானம் காப்பீர்; சூளுரைத்து இப்பொங்கல் நன்னாள் தன்னில் சுயமாக ஒழித்திடுவீர் வறுமை நோயை.
- கே.பி.பத்மநாபன், கோவை
|