Home 2011 ஜனவரி சைஃபர் நாட்டிலிருந்து சென்றவருக்கு வரவேற்பு
ஞாயிறு, 04 ஜூன் 2023
சைஃபர் நாட்டிலிருந்து சென்றவருக்கு வரவேற்பு
Print E-mail

பண்டித ஜவகர்லால் நேரு இங்கிலாந்துக்குச் சென்றபோது சந்தித்த பிரமுகர்களுள் ஒருவர் பெட்ரண்டு ரசல். இவர் தத்துவஞானி, கணித மேதை, சிந்தனையாளர் போன்ற பன்முகங்-களுடன் உலக அமைதிக்காக அரும்பாடுபட்டவர்.

புன்முறுவலுடன் நேருவை வரவேற்ற ரசல், சைஃபர் நாட்டிலிருந்து வருகின்ற உங்களை நான் வரவேற்கிறேன் என்றார். ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருகின்றவர் நீங்கள் என்று ரசல் சொல்வதுபோல் இருக்கவே, நேரு ஒரு கணம் யோசித்தார்.

நேருவின் சிந்தனையைப் புரிந்து கொண்ட ரசல், கணித சாஸ்திரத்தில் பெரிய மேதைகளைப் பெற்ற நாடு உங்கள் நாடு. சைஃபர் என்ற எண்ணைக் கண்டுபிடித்து உலகத்துக்குக் கொடுத்த பெருமை இந்தியாவுக்குத்தானே உண்டு. அந்தப் பெருமையை நினைவுப்படுத்தும் வகையில்தான் அப்படிச் சொன்னேன் என்றார். கணிதமேதை ரசல் இந்தியா-வின் இணையற்ற தலைவனுக்கு கணித மொழியிலேயே வரவேற்புக் கொடுத்து அசத்தினார்.

Share