Home 2011 பிப்ரவரி முதல் உலகப்போர்கள்
திங்கள், 27 ஜனவரி 2020
முதல் உலகப்போர்கள்
Print E-mail

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அய்ரோப்பிய நாடுகளுக்கிடையே போட்டியும், பொறாமையும் எழுந்தன. தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில நாடுகள் கூட்டுச் சேர்ந்தன. ஜெர்மனி, ஆஸ்திரியா - ஹங்கேரி, இத்தாலி ஆகியவை தம்முள் கூட்டு சேர்ந்து கொள்டன. அவை அச்சு நாடுகள் என அழைக்கப்படுகின்றன. மற்றொரு பக்கத்தில் பிட்டன். பிரான்ஸ், இரஷ்யா ஒன்று சேர்ந்தன. அவை நேச நாடுகள் என அழைக்கப்பட்டன.

முதல் உலகப் போர் தோன்றுவதற்கு உரிய காரணம்:- போர் முரசு கொட்டத் தயாராக இருந்த நாடுகள், போரினைத் தொடங்குவதற்கு ஆஸ்திரியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சி தூண்டுதலாக அமைந்தது. 1914, ஜூன் 28-ல் செர்பியா நாட்டார் ஒருவர் ஆஸ்திரிய நாட்டு பட்டத்து இளவரசனையும், அவன் மனைவியையும் சுட்டுக் கொன்றுவிட்டான். இது ஆஸ்திரியாவின் போர் வெறியைத் தூண்டிற்று. ஆஸ்திரியா, செர்பியாமீது போர் பிரகடனம் செய்தது. செர்பியாவுக்குப் பாதுகாப்பாக இரஷ்யா தன் படைகளை அனுப்பியது. விரைவில் ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் உலகப் போரில் ஈடுபட்டன.

1916, ஆகஸ்ட் 4 ல் ஜெர்மணி, பிரான்ஸ் மீது படையெடுத்தது. பிரிட்டன். ஜெர்மனிக்கு எதிராக போரில் ஈடுபட்டது. 1915 - இல் இத்தாலி போரில் ஈடுபட்டது. அமெரிக்க அய்க்கிய நாடுகள், பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் ஆதரவாக 1917 - இல் போரில் ஈடுபட்டது.

முதல் உலகப் போரினால் ஏற்பட்ட விளைவுகளும், இழப்பும்: முதன் முதலில் பீரங்கிவண்டிகள் போரில் பயன்படுத்தப்பட்டன. முதல் உலகப்போர் நவம்பர் 11, 1918 இல் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் தரைச்சண்டை, கடல் சண்டை, விமான சண்டை ஆகிய மூன்றும் இருந்தன. இது முன்னர்க்கேட்டறியாத கடும்போர். இதில் 80 லட்சம் போர்வீரர்கள் மாண்டனர். சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாயின. பல நகரங்களும். ஊர்களும், தொழிற்சாலைகளும், பாலங்களும், அணைகளும், கழனிகளும் அழிந்தன. தோற்றவர்களன்றி, வெற்றிப்-பெற்றவர்களும் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர்.

இவர் நேச நாடுகளின் 80 போர்விமானங்களை அழித்துள்ளார்)

 

- மு.நீ.சிவராசன்

Share