Home 2011 பிப்ரவரி விளையும் பயிர்..
ஞாயிறு, 09 ஆகஸ்ட் 2020
விளையும் பயிர்..
Print E-mail

18 மணிநேரம் ஆராய்ச்சிக்காக செலவிட்டவர்

அமெரிக்காவிலுள்ள மிலன் நகரில் 1847, பிப் 11 இல் பிறந்தவர். தந்தை தச்சு வேலை செய்து வந்தார். தாய் ஆசிரியையாக இருந்தார். படிப்பதற்குத் தேவையான போதிய வசதி இல்லாததால், தாயின் அரவணைப்பில் வீட்டிலேயே கல்வி கற்று வந்தார்.

இவரது மனம் சிறு வயதிலிருந்தே எதையாவது சிந்தித்து ஆராய்ந்து கொண்டே இருக்கும். ஆனால், ஆராய்ச்சி செய்து பார்க்கப் போதிய வசதி இல்லை. எனவே, நண்பர் மைக்கேல் என்பவருடன் சேர்ந்து காய்கறித் தோட்டம் அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை ஆராய்ச்சிக்கே செலவிட்டார். இந்தப் பணம் மட்டும் ஆராய்ச்சி செய்யப் போதுமா?

பத்திரிகைகள் வாங்கிவந்து ரயிலில் விற்றார். அதிலிருந்து கிடைத்த வருவாயையும் ஆராய்ச்சிக்கே செலவு செய்தார். அப்போதும் சும்மா இருக்கவில்லை. ரயில் பெட்டியின் காலியான இடத்திலமர்ந்து தான் கொண்டுவந்த வேதியியல் பொருள்களை ஆராயத் தொடங்கிவிடுவார்.

ஒரு நாள் ரயில் பெட்டி தீடீரெனத் தீப்பிடிக்கத் தொடங்கியது. வேதியியல் பொருள்கள் சிதறித் தீப்பிடித்தன. வேதியியல் பொருள்களால்தான் தீப்பிடித்தது என ரயில்வே அதிகாரி கண்டுபிடித்தார். சிறுவனை ஓங்கி ஓர் அறை அறைந்துள்ளார். அவர் அடித்த அடியில் ஒரு காது சரியாகக் கேட்காமலே போய் விட்டதாம்.

எனினும், ஆராய்ச்சியை விடவில்லை. தினமும் 18மணிநேரம் ஆராய்ச்சிக்காகச் செல-விட்டார். வேறு வேலை பார்த்துக் கொண்டே விடாமுயற்சி செய்தார். 16 வயதில் ரயில்வேயில் காவல்காரன் வேலையில் சேர்ந்தார். இரவுப் பணி. அவரது வேலை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மணி அடிக்க வேண்டும். பகல் முழுவதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுத்ததால் இரவு நேர வேலை சிரமமாகத் தெரிந்தது. மணிக்கு ஒருமுறை அலாரம் அடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தால் நாம் கொஞ்ச நேரம் தூங்கலாமே என யோசித்தார் - தானாகவே மணி அடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார்.

இப்படியே தன் வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தார். தட்டச்சு மிஷின், மின்சார பல்பு, மின்சார பேட்டரி, இசைத் தட்டுகள், தொலைபேசிக் கடத்திகள், அசையும் படங்கள், துப்பறியும் கருவிகள் ஆகியன இவரது கண்டுபிடிப்புகளுள் சில. பெல் கண்டுபிடித்த தொலைபேசியை மேலும் நவீனப்படுத்திய பெருமைக்குரியவர்.

1093 கண்டுபிடிப்புகளுக்கு உரிமம் வாங்கியுள்ள இந்த அதிசய - அற்புத மனிதர், படிக்காத மேதை தாமஸ் ஆல்வா எடிசன்.

Share