Home 2011 மார்ச் மனம் வாழ்த்தும் மணியம்மையார்
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022
மனம் வாழ்த்தும் மணியம்மையார்
Print E-mail

நினைவு வானில் மீண்டும் மீண்டும் நின்று சிரிக்கிறார் - மணியம்மா

நின்று சிரிக்கிறார்! ...நினைவு

புனைவு நாடாப் புதுமைப் பெண்ணாய்

பூத்துச் சிரிக்கிறார் - மணியம்மா

பூத்துச் சிரிக்கிறார்! ...நினைவு மொழியின் உரிமைப் போரின் மணியாய்

விளங்கிச் சிரிக்கிறார் -  மணியம்மா

விளங்கிச் சிரிக்கிறார் ...நினைவு

விழியைப் போல வழியைக் காட்டி

விளங்கிச் சிரிக்கிறார் - மணியம்மா

விளங்கிச் சிரிக்கிறார் ... நினைவு

வென்று வாழும் மறத்தி போல

முழங்கிச் சிரிக்கிறார்! - மணியம்மா

முழங்கிச் சிரிக்கிறார்! ...நினைவு

மன்று பெண்டிர் இழிவை வெல்ல

முழங்கிச் சிரிக்கிறார் - மணியம்மா

முழங்கிச் சிரிக்கிறார்! ... நினைவு

பெ. குறளன்பன்,
திருச்சி
.

Share