Home 2011 மார்ச் கடிக்கிறாங்க
திங்கள், 25 மார்ச் 2019
கடிக்கிறாங்க
Print E-mail

உங்க வீட்டுச் சுவர்க் கடிகாரம் ஓடலையே ஏன்?
நல்லா ஆணி வச்சு அடிச்சிருக்கோம்!

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பாப்பா ஏன் அழுகிறாள்?
அதற்கு, பிஸ்கட் சாப்பிடத் தெரியவில்லை. வாங்கிச் சாப்பிட்டுக் காண்பித்தேன் அதான்!

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஊசி விழுற சப்தம் மட்டும்தான் கேட்கணும் தெரியுதா?
எல்லோரும் அமைதியா இருக்காங்க, ஊசியைப் போடுங்க சார்!
மு.ஹ. முஹம்மது அபூபக்கர்
காயல்பட்டினம்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பிரகாஷ்: பார்க்கில் உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்?
பிரதீப்: புல்லரிக்கும்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அப்பா: ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?
மகன்: அது வாயில்லா ஜீவன்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

கலா: யாருமே அழமாட்டேங்கிறாங்க
பிரபு: அதுக்காக சாவு வீட்டுல மெகாதொடர் காட்டுறதா?

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஆசிரியர்: தேள் கொட்டிவிட்டால் முதலில் என்ன செய்யவேண்டும்.
பையன்: ஸ்கூலுக்கு லீவு போட வேண்டும்.

சு.பி. பிரசாந்த்
மதுரை

Share