எப்படி? எப்படி?
Print

கேள்வி: வயதாக வயதாக நம் தோலில் சுருக்கம் விழுவது ஏன்?

-எஸ்.தணிகைவேல்,
பெரிய காஞ்சிபுரம் - 2

பதில்: நமது தோலின் அனைத்துப் பகுதிகளிலும் எலாஸ்டிக் போன்ற படலம் படர்ந்திருக்கிறது. இது தோல் விரிவடையும்போது (உதாரணமாக, சிரிக்கும்போது கன்னத்தில் தோல் விரிவடைவதுபோல்) தோலிலுள்ள எலாஸ்டிக் பயன்பாட்டிற்கு வந்து பின்பு பழைய நிலைக்கு மாறுகிறது. நமது ஆடைகளிலுள்ள எலாஸ்டிக் போன்று உள்ளதே தோலின் அமைப்பு. இதைப்போலவே நமது உடலிலுள்ள செல் அதன் செயல்பாட்டை முடித்தவுடன், இறந்து போகாமல் அது 3,4 செல்களாகப் பிரிந்து மீண்டும் செயல்படத் தொடங்குகிறது. இதுவே செல்லின் இயல்பு.

வயது முதிர்வடையும்போது தோல் எலாஸ்டிக் தன்மையை இழக்கிறது. அதேநேரத்தில் செல்களும் செயல்படாமல் போகின்றன. ஆகவே, விரிவடைந்த தசைகள் திரும்பப் பழைய நிலைக்கு வர மறுக்கவே தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

- முகில் அக்கா

Share