உலகநாடுகள் - சாட்
Print
  • நான்கு பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்ட நாடு

  • பிரெஞ்சு பூமத்திய ஆப்ரிக்காவின் வடகோடியிலுள்ள பிரதேசம்

  • தலைநகர் இன்ட்ஜமெனா (N’Djamena)

  • பிரெஞ்சு, அரபி மற்றும் பழங்குடி மொழிகள் பேசப்படுகின்றன

  • 1960, ஆகஸ்ட் 11 இல் விடுதலை பெற்றது

  • பிரதமராக இம்மானுயல் நடிங்கர் (Emmanuel Nadingar) உள்ளார்

  • குடியரசுத் தலைவராக இட்ரிஸ் டெபி (Idriss Deby) உள்ளார்

  • நாணயம்: பிராங் சிஎப்ஏ (Franc CFA)

  • முக்கிய நகரங்கள்: போர்ட்லாமி, மௌண்டோ

  • இஸ்லாமியர், கிறிஸ்தவர், பழங்குடியினர் வாழ்கின்றனர்

சகரா பாலைவனத்தினுள் அமைந்துள்ள இந்நாட்டை கி.பி. 1900 இல் பிரான்ஸ் தன் பாதுகாப்பின்கீழ்க் கொண்டு வந்தது. 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் விடுதலை பெற்றது.

வடக்குப் பகுதியிலிருந்த முஸ்லிம் கலகக்காரர்களுக்கும், தெற்கிலிருந்த கிறிஸ்தவ அரசுக்குமிடையே 1966 இல் பல போர்கள் நடைபெற்றன.

வடக்குப் பகுதியிலிருந்த லிபியா இந்நாட்டைத் தன் நாட்டுடன் இணைப்பதற்குப் பலவகைகளில் முயற்சிகளை மேற்கொண்டது. லிபியாவின் முயற்சிகளைப் பார்த்த பிரான்ஸ் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தது. இரு நாடுகளும் இந்நாட்டிற்குப் படைகளை அனுப்பின. 1984 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படைகளும், 1987 ஆம் ஆண்டு லிபியப் படைகளும் இந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டன.

புவியியல் அமைப்பு

வடக்கில் லிபியா, கிழக்கில் சூடான், தெற்கில் மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, மேற்கில் காமரூன், நைஜீரியா மற்றும் நைஜர் நாடுகள் எல்லைகளாக அமைந்துள்ளன. சகாரா பாலைவனத்தின் ஒரு பகுதி சாட்டில் அமைந்துள்ளது. வடக்கில் டிபெஸ்டி (Tibesti), என்னெடி (Ennedi) மலைகளும், மேற்கில் சாடு ஏரியும் உள்ளன. தென்பகுதியில் காடுகள் நிறைந்துள்ளன.

தட்பவெப்ப நிலை

வடக்குப் பகுதியில் வறண்ட கால நிலையும், மத்தியப் பகுதியில் மிதமான காலநிலையும், தெற்குப் பகுதியில் அயனமண்டலக் கால நிலையும் நிலவுகின்றன.

கனிம வளம்

வைரம், செம்பு, துத்தநாகம் ஆகியன கிடைக்கின்றன.

வேளாண்மை

நாட்டின் பாதி நிலப்பகுதி விவசாய நிலங்களாக உள்ளன. பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். காபி, பருத்தி, வாழைப்பழம், தானியங்கள், கோகோ, சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியன விளைகின்றன. சாரி (chari) ஆறு ஓடி நாட்டை வளமாக்குகிறது.

தொழில் கால்நடை வளர்த்தல், மீன்பிடித்தல், ஆடைகளைத் தயாரித்தல், மதுபான உற்பத்தி ஆகியன முக்கியத் தொழில்களாக உள்ளன.

ஏற்றுமதி இறக்குமதி

பதப்படுத்திய இறைச்சி, மீன், தோல், தந்தங்கள் பருத்தி ஆகியன முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாகும்.

கோதுமை, பெட்ரோலியம், எந்திரங்கள், போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியன இறக்குமதி செய்யப்படுகின்றன.

விளையாட்டு

கால்பந்து (football) முக்கிய விளையாட்டாகத் திகழ்கிறது. தேசிய அணியினர் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளனர். கூடைப்பந்து (Basketball), மல்யுத்தத் (wrestling) திலும் சிறந்த பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளனர்.

எழுத்தாளர்கள்

1962 இலிருந்து 20 எழுத்தாளர்கள் உலகப் புகழ்பெற்ற 60 படைப்புகளைப் படைத்துள்ளனர். ஜோசப் பிரகிம் செய்யது, பாபா மௌஸ்தபா, ஆண்டனி பன்குய், கௌல்சி லாம்கோ ஆகியோர் புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர்.

இசைக்கருவிகள்

கின்டே (kinde) காகாகி (kakaki) ஹூ ஹூ (hu hu) ஆகியன விளையாட்டு இசைக்கருவிகளாகும். ஹார்ப்ஸ் மற்றும் கோட்ஜோ (harps and kodjo) மத்தளங்களாகும். மத்தள ஓசையுடன் புல்லாங்குழலின் இசையையும் இணைத்து ஒலிப்பது கனெம்பு (kanambu) இசைக்கருவியாகும்.

சுற்றுலாத் தலங்கள்

ஃபிட்ரி (Fitri) ஏரி, திபெஸ்டி சோடா ஏரி (Tibesti Soda Lake), கௌதியாட் நீர் வீழ்ச்சி (Gauthiot Falls), ஆயுக்(aouk) தேசிய பூங்கா, மண்டா (manda) தேசிய பூங்கா.

Share