விடுகதைகள்
Print
  1. இருவர்க்கு, மேலும் இருவர் துணை. அவர்கள் யார்?

  2. ஒரு வாய் தண்ணீரைச் சுமந்தபடி உயரத்தில் நிற்கிறான். அவன் யார்?

  3. வாரி வாரி வழங்குவான் வெளிச்சம், அதை வாங்கத்தான் ஆளில்லை. அவன் யார்?

  4. மண்ணுக்குள் இருப்பான் குழம்பிலும் மணப்பான். அவன் யார்?

  5. வருவான் போவான், வருவது தெரியும் பார்க்கத்தான் முடியாது. அவன் யார்?

  6. ஆயிரம் கண் உண்டு, அசந்து தூங்க இடம் உண்டு. அது என்ன?

  7. மூன்று கோடுள்ளவன், அழகு வாலுள்ளவன், பழத்துக்கு மட்டும் எதிரி. அவன் யார்?

  8. கைக்குப் பூசினால் கல்யாண வீடு, உடம்புக்குப் பூசினால் குளிர்ச்சி. அது என்ன?

  9. தண்ணீருக்குள் வந்தவனைத் தண்ணீரிலேயே கரைத்தார்கள். அவன் யார்?
  10. புள்ளிகளைச் சுமந்தபடி புல்வெளியில் நடமாடுவான். அவன் யார்?

 

விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்

_ _ _ _ _ __ _ __ _ _ _ _ _ _ __ _ __ _ _ _ _ _ _ __ _ __ _ _ _ _ _ _ __ _ __ _ _ _ _ _ _ __ _

 

Share