Home 2011 ஏப்ரல் கடிக்கிறாங்க?
ஞாயிறு, 25 அக்டோபர் 2020
கடிக்கிறாங்க?
Print E-mail

ஆசிரியர்: டாக்டர் சர்ட்டிபிகேட் வாங்கிட்டு வரச் சொன்னேனே வாங்கிட்டு வந்தியா?

மாணவன்: கேட்டேன் சார். அது அவர் படிச்சு வாங்கின சர்ட்டிபிகேட்டாம். தர முடியாதுன்னு சொல்லிட்டாரு!

ஆசிரியர்: ஏண்டா... என்னிடம் இப்படிப் பொய் பேசுறே?

மாணவன்: உங்களைப் பார்த்ததும் மெய் மறந்து போயிடுறேன் சார், அதான்!

- மு.ஹ.ஆபூபக்கர்
காயல்பட்டினம்

குறும்பு செய்யும் (விண்மீன்) நட்சத்திரம் எது?

வால் நட்சத்திரம்!

வரி செலுத்த ஏற்ற மாதங்கள் எவை?

ஜனவரி, பிப்ரவரி

- மெ.அ.கா.ஹாஜா தவ்பீக்
காயல்பட்டினம்

“I don’t know” - னா என்னடா அர்த்தம்? எனக்குத் தெரியாது.
உனக்கும் தெரியாதா....!

- எஸ். தணிகைவேல், பெரிய காஞ்சிபுரம்

Share