கடிக்கிறாங்க? | ||
|
ஆசிரியர்: டாக்டர் சர்ட்டிபிகேட் வாங்கிட்டு வரச் சொன்னேனே வாங்கிட்டு வந்தியா? மாணவன்: கேட்டேன் சார். அது அவர் படிச்சு வாங்கின சர்ட்டிபிகேட்டாம். தர முடியாதுன்னு சொல்லிட்டாரு! ஆசிரியர்: ஏண்டா... என்னிடம் இப்படிப் பொய் பேசுறே? மாணவன்: உங்களைப் பார்த்ததும் மெய் மறந்து போயிடுறேன் சார், அதான்! - மு.ஹ.ஆபூபக்கர் குறும்பு செய்யும் (விண்மீன்) நட்சத்திரம் எது? வால் நட்சத்திரம்! வரி செலுத்த ஏற்ற மாதங்கள் எவை? ஜனவரி, பிப்ரவரி - மெ.அ.கா.ஹாஜா தவ்பீக் “I don’t know” - னா என்னடா அர்த்தம்? எனக்குத் தெரியாது. - எஸ். தணிகைவேல், பெரிய காஞ்சிபுரம்
|