பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி நீயும் கொஞ்சம் நில்லு வானில் நீந்தும் வித்தையினை நீயும் கொஞ்சம் சொல்லு விதவிதமாய் வண்ணத்திலே பறக்கும் பட்டாம்பூச்சியே உன்னைப் போல தோட்டத்திலே பறக்க எனக்கு ஆசையே பிடித்து உன்னை நூலில் கட்டி விளையாடும் சில போக்கிரிகள் யாவரும் எனக்கு எதிரிகள் பறக்கும் உன்னைப் பார்க்கையிலே உள்ளத்தில் இன்பம் பொங்குமே பறக்கும் இந்த வண்ணப்பூவை காணக் கண்கள் வேண்டும் கோடி பட்டாம்பூச்சியைப் பார்க்கப் பார்க்க கவலைகள் யாவும் போகும் ஓடி!
- சசிபிரபு சென்னை- 90
|