Home 2011 மே சேதி தெரியுமா?
சனி, 10 ஜூன் 2023
சேதி தெரியுமா?
Print E-mail

பிஞ்சு வாசகர்களே...நீங்கள் பத்திரிகைகள் படிக்கிறீர்களா? தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்கிறீர்களா?அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடியுங்கள்.

1. இந்த (2011) ஆண்டு மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான அணி கோப்பையை வென்றது. இதற்கு முன்பு இந்தியா எந்த ஆண்டு யாருடைய தலைமையில் வெற்றி பெற்றுள்ளது?

2. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதையும் சேர்த்து இதுவரை எத்தனை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன?

3. அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு? தமிழ்நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு?

4. கடந்த சில மாதங்களாக எந்த நாட்டில் அமெரிக்கா ராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகிறது?

5. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தக் கல்வி ஆண்டில் கொண்டுவரப்பட்டுள்ள கல்வி முறைக்கு என்ன பெயர்?

- - - - -

விடை:

1. 1983 - இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய அணியை வென்றது.

2. 14

3. இந்தியா - 121 கோடி. தமிழ்நாடு - 7 கோடியே 21 லட்சத்து 38,958.

4. லிபியா

5. சமச்சீர் கல்வி முறை

Share