விடுகதைகள் | |||
|
1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்? 2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன? 3. கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன? 4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? 5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்? 6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? 7. குட்டி போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன? 8. கிளை இல்லா மரம், வெட்ட வெட்ட வளரும். அது என்ன? 9. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்? 10. ஓட்டுக்குள்ளே வீடு; வீட்டுக்குள்ளே கூடு. அது என்ன? - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - விடை : 2.மின்விசிறி 3.பொம்மை 4.தையல்காரர் 5.நிழல் 6.படகு 7.வௌவால்
9.தண்ணீர் 10.நத்தை
|