ஆமையர் வெல்லணும்
Print

ஆமையர் வெல்லணும்
ஊர்ந்து செல்லும் ஆமைக்கும்
ஓட்டம் மிகுந்த முயலுக்கும்
ஓர்நாள் போட்டி நடந்ததே
ஊர் திரண்டு பார்த்ததே!
விரைந்து சென்ற முயலது
இடையில் உறக்கம் கொண்டது
நகர்ந்து சென்ற ஆமையோ
தொடர்ந்து வெற்றி கண்டது
தொடர்ந்து முயற்சி செய்பவர்
தோற்கப்படுவதில்லையே
அடங்கிக் கிடக்கும் ஆமையர்
அடைய வேண்டும் வெற்றியே!

- குராயூர் எரியீட்டி
வேலூர்

Share