கருப்பு சிவப்புக் கயிற்றினை _ மணிக் கட்டில் கட்டி வாழ்வாரை (திரிபவரை) கருத்தும் அறிவும் மிக்கநாம் _ உடன் கண்டு எதிர்த்து உணர்த்துவோம்! திருத்தம் மிக்க அறிவுதான் _ நாம் தேறி விளங்கச் செய்திடும்! உருத்துகின்ற கயிறுகள் _ நம் உடலை, உணர்வை ஒடுக்கிடும்! வருத்தம் இன்றி வாழ்ந்திட _ பலர் வளர்க்கும் மூடப் பழக்கத்தை, நெருப்புப் போல எதிர்த்துநில்!_என்றும் நிலைக்கும் அறிவைப் போற்றிக்கொள்! தழல் தேன்மொழி _ புதுச்சேரி
|