Home 2011 ஜூன் விடுகதைகள்
வெள்ளி, 09 ஜூன் 2023
விடுகதைகள்
Print E-mail

1.  கொதிக்கும் குளத்தில் குதிப்பான், குண்டுப் பையனாய் மிதப்பான் - அவன் யார்?

2.  உள்ளே இறுகுவான், வெளியே உருகுவான் - அவன் யார்?

3.  எண்ணெய் வேண்டாம், திண்ணை போதும் எரிவான், வெளிச்சம் தருவான் - அவன் யார்?

4.  ஒட்டியிருந்த மகளை விட்டுப் பிரிந்து வந்தேனே - அது என்ன?

5.  அழிக்கும் பணி கொண்ட இவனுக்கு பள்ளிப் படிப்பில் தனியிடம் உண்டு - அது என்ன?

6.  மரக் கிளையே தலையில் இருந்தாலும் மனம் கலங்கித் திரிவான் காட்டுக்குள்.  அவன் யார்?

7.  வேகாத வெயிலில் வெள்ளையன் விளைகிறான் - அவன் யார்?

8.  குதிரை ஓட ஓட வால் குறையும்.  அது என்ன?

9.  பூக்கும், காய்க்கும், வெடிக்கும்.  ஆனால் பழுக்க மட்டும் செய்யாது.  அது என்ன?

10.  ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான் அவன் யார்?

 


விடைகள்

1.. பூரி, 2. அய்ஸ்கட்டி, 3. மெழுகுவர்த்தி, 4.  உமி - நெல், 5. ரப்பர், 6. மான்
7. உப்பு, 8. ஊசி நூல், 9. இலவம்பஞ்சு, 10. யானை

Share