Home 2011 ஜூன் கதைகேளு கணக்குப் போடு..
ஞாயிறு, 04 ஜூன் 2023
கதைகேளு கணக்குப் போடு..
Print E-mail

கோடை விடுமுறைக்கு மாமா வீட்டிற்குச் சென்ற முகில் பள்ளி திறக்கப் போவதால் தங்கள் வீட்டிற்கு வந்தான்.  வீட்டிற்குள் வந்ததும் மாம்பழ வாசனை நாசியைத் துளைத்தது.  சுற்றிச் சுற்றிப் பார்த்தவனின் கண்களில் ஒரு கூடை மாம்பழங்கள் பளிச்சிட்டன.

அப்பாவிடம் சென்று, மாம்பழங்களைக் கடையில் வாங்கினீர்களா, எவ்வளவு அப்பா என்றான்.  முகிலின் அப்பா, நம் வீட்டிற்குப் பின்புறம் வளரும் மாமரத்தில் பறித்தவை என்றார்.  இவ்வளவு மாம்பழங்களா நம்ம மரத்தில்!  மொத்தம் எவ்வளவு காய்ச்சிருக்கு என்றான்.

உடனே, முகிலின் அப்பா, நீதான் கணக்கில் புலியாச்சே, வேறுவிதமாகச் சொல்கிறேன், கண்டுபிடி என்றார்.

கூடையில் உள்ள பழங்களை இரண்டாகப் பங்கிட்டால் ஒரு பழம் மீதியாகும்.  மூன்றாகப் பங்கிட்டால் 2 பழம் மீதியாகும்.  நான்காகப் பங்கிட்டால் 3 பழம் மீதியாகும்.  அய்ந்தாகப் பங்கிட்டால் 4 பழம் மீதியாகும்.  ஆறாகப் பங்கிட்டால் 5 பழம் மீதியாகும்.  ஏழாகப் பங்கிட்டால் மீதியில்லாமல் சரியாகப் போகும்.

அப்படியென்றால் கூடையில் உள்ள மொத்தப் பழங்கள் எத்தனை என்றார்.

முகில் யோசித்தான்.  கூடையிலிருந்த பழங்களின் எண்ணிக்கையைக் கண்டுபிடித்தான்.  நீங்களும் யோசித்துக் கண்டுபிடியுங்கள்.



கதை கேளு கணக்குப் போடு
விடை:

கூடையிலிருந்த மொத்த பழங்கள் 119

இரண்டாகப் பங்கிட்டால் 119/2 = 59 மீதி 1

மூன்றாகப் பங்கிட்டால் 119/3    = 39 மீதி 2

நான்காகப் பங்கிட்டால் 119/4    = 29 மீதி 3

அய்ந்தாகப் பங்கிட்டால் 119/5    = 23 மீதி 4

ஆறாகப் பங்கிட்டால் 119/6    = 19 மீதி 5

ஏழாகப் பங்கிட்டால் 119/7    = 17 மீதி 0

Share