Home 2011 ஜூன் தன்னம்பிக்கை
ஞாயிறு, 04 ஜூன் 2023
தன்னம்பிக்கை
Print E-mail

லிங்கனின்  பதில்!

அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் தமது பிரசங்கத்தில் சொர்க்கம்பற்றி வருணித்துக் கொண்டிருந்தார்.  அந்தக் கூட்டத்தில் ஆபிரகாம் லிங்கனும் கலந்து கொண்டிருந்தார்.  பிரசங்கத்தினிடையே பாதிரியார், கூடியிருந்த மக்களை நோக்கி, உங்களில் சொர்க்கத்திற்குச் செல்ல ஆசை உள்ளவர்கள் எழுந்து நில்லுங்கள் என்றார்.

ஆபிரகாம் லிங்கன் தவிர அனைவரும் எழுந்து நின்றனர்.  லிங்கன் அமர்ந்திருப்பதைக் கண்ட பாதிரியார், நீ ஏன் சொர்க்கம் செல்ல விரும்பவில்லை? என்று கேட்டார்.

அதற்கு லிங்கன், நான் தேர்தலில் நிற்கப் போகிறேன்.  அமெரிக்க நாட்டின் அதிபராகி, அமெரிக்க நாட்டையே சொர்க்க பூமியாக மாற்றப் போகிறேன் என்றார்.  சொன்னதுபோல் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.  அதிபராகி நாட்டை வளம் மிக்க நாடாக்கினார்.

Share