Home 2011 ஜூன் அறிஞர்களின் வாழ்வில்......
வெள்ளி, 09 ஜூன் 2023
அறிஞர்களின் வாழ்வில்......
Print E-mail

சமத்துவம் விரும்பியவர்

ரஷ்யாவின் ஜார்ஜியக் குடியரசில் காரி என்ற ஊரில் 1879 டிசம்பர் 21 ஆம் நாள் பிறந்தவர்.  தந்தை செருப்புத் தைக்கும் தொழிலையும், தாய் சலவைத் தொழிலையும் செய்து வந்தனர்.  பாதிரியார் ஆக்க நினைத்த பெற்றோர் சமயப் பள்ளியில் சேர்த்தனர்.

பொதுவுடைமைக் கட்சியில் தொடர்புகொண்டு புரட்சியில் ஈடுபட்டமையால், பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.  லெனின் ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்றார்.  லெனினின் மறைவுக்குப் பின்னர் அதிபரானார்.

ரஷ்யாவைத் தொழில் வளமிக்க நாடாக்க விரும்பினார்.  கடுமையாக உழைத்தார்.  எதிர்ப்புகள் அதிகம் இருந்தன.  அனைத்தையும் ஒடுக்கினார்.  ஆற்றலில் மிகப் பெரியது மன ஆற்றல் என்று கூறியதோடு, செயல்படுத்தியும் காட்டினார்.

ஜெர்மனியின் தளபதி ஒருவரை ரஷ்யா சிறை பிடித்து வைத்தது.  அவரை மீட்பதற்காக, ரஷ்ய அதிபருக்கு ஜெர்மன் இராணுவம் கடிதம் எழுதியது.  அதில், உங்கள் மகன் எங்கள் பிடியில் உள்ளான்.  உங்கள் மகனை விடுதலை செய்யவேண்டும் என்றால் எங்கள் தளபதியை விடுதலை செய்யுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தைப் படித்த ரஷ்ய அதிபர், உங்கள் தளபதியை விடுதலை செய்தால் என் மகனை விடுவிப்பதாகச் சொல்லியுள்ளீர்கள்.  என் மகன் ரஷ்யப் படையில் சாதாரண வீரன். ஒரு சாதாரண வீரனை விடுதலை செய்வதற்குப் பதிலாக தளபதியை எப்படி விடுதலை செய்ய முடியும்? எங்களிடம் உள்ள உங்கள் சாதாரண வீரனை விடுவிக்கிறோம் என்று பதில் எழுதினார்.  மகனாகட்டும், யாராகட்டும் விடுவிப்பதில் சமத்துவம் வேண்டும் என எண்ணியவர் சோஷலிசவாதி ஸ்டாலின்.

Share