Home 2011 ஜூன் ஆல்ப்ரெட்ச் டுரரின் அதிசயக் கணிதம் 34
வெள்ளி, 09 ஜூன் 2023
ஆல்ப்ரெட்ச் டுரரின் அதிசயக் கணிதம் 34
Print E-mail

உலகில் கணிதமேதைகள் பலர் உண்டு. அவர்கள் பெரும்பாலும் கணிதத்தில் மட்டுமே புலமை பெற்றவர்களாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு வேறு சில திறமைகளும் இருக்கலாம். இவர்களில் மாறுபட்டவராக ஒருவர் உண்டு .அவர் பெயர் ஆல்ப்ரெட்ச் டுரர்.பண்டைய ரோமானியப் பேரரசில் நியூரம்பர்க் நகரில் பிறந்தவர். 1471 இல் பிறந்து 1528 வரை வாழ்ந்த இவர் மிகச் சிறந்த ஓவியராகத் திகழ்ந்தவர். அத்துடன் அச்சுக்கலைஞராகவும், சிற்பியாகவும், மருத்துவ ஆய்வாளராகவும் திகழ்ந்ததோடு கணிதத்திலும் மேதையாக விளங்கியவர். இவர் உருவாக்கியதுதான்  இந்த அதிசயக் கணிதம். 34 என்ற எண்ணைக் கொண்டு இந்தக் கட்டத்தை இவர் உருவாக்கியுள்ளார். எந்தப் பக்கம் இருந்து கூட்டினாலும் அதன் கூட்டுத்தொகையாக 34 ஆகவே இருக்கிறது.

ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமாகக் கூட்டுங்கள் விடை 34

ஒவ்வொரு வரிசையிலும் மேலிருந்து கீழாகக் கூட்டுங்கள் விடை 34

நான்கு முனைகளையும் கூட்டுங்கள் விடை 34

கடிகாரச் சுற்றில் கூட்டுங்கள் விடை 34

நடுவில் உள்ள கட்டங்களை மட்டும் கூட்டுங்கள் விடை 34

ஒரே மாதிரி வண்ணமிட்ட கட்டங்களைக் கூட்டுங்கள் விடை 34

 

Share