கதைகேளு கணக்குப் போடு
Print

யாழினியும் சுமதியும் தோழிகள்.  கோடை விடுமுறைக்குப் பின் பள்ளியில் சந்தித்த இருவரும் தங்களது விடுமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  அப்போது யாழினி, தான் விடுமுறைக்கு மாமா ஊருக்குச் சென்றபோது மாமாவின் மகள் தேன்மொழி தனக்கு ஒரு புதிர்க் கணக்கினைப் போட்டதாகவும் தான் அதற்குக் கஷ்டப்பட்டு விடை கண்டுபிடித்துக் கூறியதாகவும் கூறினாள்.

இதனைக் கேட்ட சுமதி, அதென்ன புதிர்க்கணக்கு?  நீ கஷ்டப்பட்டு விடை கண்டுபிடித்ததை நான் எளிதில் விடை கண்டுபிடித்துக் கூறுகிறேன், கணக்கினைச் சொல் என்றாள்.

உடனே யாழினி, ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களைப் பயன்படுத்திய கணக்கு, பூஜ்யம் கிடையாது; ஒன்று என்ற எண்ணை 3 முறையும் மற்ற எண்கள் ஒவ்வொன்றையும் 2 முறையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

கூட்டினால் 111 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரத்து 111 வரும்.  (111,11,11,111).  முடிந்தால் கண்டுபிடி என்றதும், சுமதி மின்னல் வேகத்தில் கணக்குப் போட்டு விடையினைக் காட்டினாள்.

நீங்களும் கண்டுபிடித்துவிட்டீர்களா?

(விடை இன்னொரு பக்கம்)

Share