விடுகதைகள்
Print

1.    ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?

2.    காய்ந்த மரத்தில் கல் எடுத்துப் போட்டால் காவற்காரப் பையன் கோபத்திற்கு வருவான். அவன் யார்?

3.    முகம் இருக்கிறது, கைகள் இருக்கிறது. கால்கள் இல்லை, நடக்கிறேன். நான் யார்?-

4.    சின்னச் சின்னக் கதவுகள், தச்சன் செய்யாக் கதவுகள், கதவடைக்கும், சத்தம் கேட்காது. அவை என்ன?

5.    ஒரு சாண் மனிதனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அவன் யார்?

6.    சமைக்க முடியாத மீன்கூட்டம் எட்டாத உயரத்தில். அது என்ன?

7.    இவனைப் புரட்டப் புரட்ட புதுப் புது அர்த்தங்களை உணர்த்திடுவான். அவன் யார்-?

8.    ஆயிரம் கதைகள் எழுதுவான், அகிலத்தை ஆட்டி வைப்பான், நாக்கு வறண்டால் வீழ்ந்திடுவான். அவன் யார்?

9.    சாத்திய கதவிருக்க, ஏற்றிய விளக்கிருக்க, இரவில் வந்தது யார்? இரத்தத்தைக் குடித்தது யார்?

10.    செடிக்குக் கீழ்வரும் கிழங்கு, செழுமையாக இருக்கும், பெண்மைக்கு இது பெருமை. அது என்ன?

Share