தகவல் களஞ்சியம்
Print

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.

அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும். சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.


தெரியுமா?

 

  • தற்போது வாழும் முதுகெலும்புடைய உயிரினங்களில் மிகவும் பழமையான உயிரினம் ஆமை.
  • வயிற்றில் பல் கொண்ட பறவையின் பெயர் கிவி.

  • கறுப்பு விதவை என்ற அடைமொழியால் குறிக்கப்படுவது சிலந்தி. இது 8 கால்களைக் கொண்டது.

  • விலங்கியல் அறிஞர்கள் தூக்கணாங்குருவியை கட்டடக் கலைஞன் என்று அழைக்கிறார்கள்.

தொகுப்பு : கலவை பா. வரதன்

 


 

1.    உடலின் சராசரி வெப்பநிலை 36. 90 சி

2.    மனித உடலில் குரோமோசோம்கள் 23 ஜோடிகளாக உள்ளன.

3.    மனித உடலில் 639 தசைகள் காணப்படுகின்றன.

4.    இதயம் கார்டியத் தசையால் ஆக்கப்பட்டது.

5.    நியூரான் என்பது நரம்பு செல் ஆகும்.

6.    மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை 1400 ஆகும்.

7.    ஓர் உடல் 5 லிட்டர் இரத்தத்தைக் கொண்டுள்ளது.

8.    உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அல்லது 98.40 தி

9.    மனித இதயம் 70 வருடத்தில் 3,000 மில்லியன் முறை துடிக்கும்.

10.    மனித வயிற்றின் கொள்ளளவு 1.5 லிட்டர்.

11.    எச்.அய்.வி. வைரஸ்  எய்ட்ஸைப் பரப்பும்.

சு. தமிழ்மணி 7 ஆம் வகுப்பு
நகராட்சி உயர்நிலைப் பள்ளி,
அருப்புக்கோட்டை


துணுக்குகள்

முதலலையால் சுமார் 6 மணிநேரம் வரை மூச்சுத் திணறாமல் தண்ணீருக்குள்   இருக்க முடியும்.

கிராம்பு என்பது காயோ, கனியோ அல்ல, ஒரு மரத்தின் மொட்டு.

எறும்பு 100 நாட்கள் வரை கூட தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழும். தலை துண்டிக்கப்பட்டாலும் 20 நாட்கள் உயிருடன் இருக்கும்.

புழு, பூச்சிகளிலேயே மிக அதிகமான கால்களைக் கொண்டது மண்புழுதான். இதற்கு, சுமார் 1,200 கால்கள் உள்ளன.

பறவை இனங்களிலேயே பென்குயின் ஒன்றுதான் நீந்துவதற்குத் தன் சிறகுகளைப் பயன்படுத்துகிறது.

கடல் உயிரினங்களில் மோப்ப சக்தி கொண்டது சுறா மீன்.

தொகுப்பு:  அணு - கலைமகள்

Share