சுனாமி பெயர் வந்தது எப்படி?
Print

துறைமுகங்களை அடிக்கடித் தாக்கிவரும் இராட்சத அலைகளுக்கு சுனாமி என பெயர் வைத்தவர்கள் ஜப்பானியர்கள். ஜப்பான் மொழியில் சு என்றால் துறைமுகம் என்றும், னாமி என்றால் அலை என்றும் பொருள். இவ்விரண்டு எழுத்துகளையும் இணைத்து சுனாமி என இப்பேரழிவு அலைகளைக் குறிப்பிடுகின்றனர். அறிவியல் உலகம் இந்த அலைகளை நில நடுக்க அலைகள் என அழைத்தாலும் சுனாமி என்ற ஜப்பானியப் பெயரே நிலைத்துவிட்டது.
ப.வனிதா, 8ஆம் வகுப்பு, அருப்புக்கோட்டை

Share