Home 2011 அக்டோபர் உலக நாடுகள்
புதன், 21 அக்டோபர் 2020
உலக நாடுகள்
Print E-mail
  • இத்தாலியால் சூழப்பட்ட ஒரு சிறிய அய்ரோப்பிய நாடு
  • தலைநகர் சான் மரினோ
  • பெரிய நகரமாக டொகானா (Dogana) உள்ளது
  • ஆட்சிமொழியாக இத்தாலி உள்ளது.
  • கிறித்தவ சமயத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.
  • ரோமன் பேரரசிலிருந்து செப். 3, 301இல் பிரிந்தது.
  • நாணயம் யூரோ (Euro)
  • மரிய லுயிசா பெர்டி (Maria Luisa Berti), பிலிப்போ டெமாக்நினி (Filippo Tamagnini) ஆகியோர் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.

உலகின் மிகச்சிறிய நாடுகளுள் இதுவும் ஒன்று. உலகிலேயே மிகப் பழைமையான குடியரசு நாடு என்றழைக்கப்படுகிறது. 301இல் சென்மரீனஸ் என்பவரால் அமைக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பழைமையான அரசியலமைப்பைக் கொண்டது. 1600ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

இன்றும் அது நடைமுறையில் உள்ளது. 1945லிருந்து 1957 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கம்யூனிச நாடாக இருந்துள்ளது. 1968ஆம் ஆண்டு நாவுரு நாடு விடுதலை அடையும்வரை உலகின் மிகவும் சிறிய குடியரசு நாடாக இருந்துள்ளது. தற்போது அய்ரோப்பாவின் மூன்றாவது மிகச் சிறிய நாடாக உள்ளது. சுற்றுலா மற்றும் அழகிய தபால்தலைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகத் திகழ்கிறது. சான் மரினோவில் பிறந்த ஒருவர், பிற்காலத்தில் உலகின் எந்த இடத்தில் வசித்தாலும் அவருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அய்ரோப்பியக் கவுன்சிலில் 1988லிருந்தும் அய்க்கிய நாடுகள் சபையில் 1992லிருந்தும் உறுப்பினராக உள்ளது. டிட்டானோ மலையிலிருந்து சான் மரினோவின் முழுமையான பகுதிகளைப் பார்த்து ரசிக்கலாம்.

புவியியல் அமைப்பு

எமிலியா, ரோமக்னா, மார்சே மற்றும் அட்ரியாடிக் கடற்கரையால் சூழப்பட்டுள்ளது. மேற்பரப்பில் அபென்னைன் மலைத்தொடர் உள்ளது. நாட்டின் மிக உயர்ந்த புள்ளியாக மான்டே டிடாநோ (Monte Titano) உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 749 மீ (2,457 அடி) உயரம் உள்ளது. நிலமானது சமமான பரப்பளவில் அமையவில்லை. பெரும்பாலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

வேளாண்மை

கோதுமை, பார்லி, ஆலிவ் ஆகியன முக்கிய விளைபொருள்கள்.

கனிமவளம்

மலைப் பகுதியில் கட்டடக் கல் வெட்டி எடுக்கப்படுகிறது.
ஏற்றுமதிப் பொருள்கள்
கட்டடக் கல், எலுமிச்சை, முந்திரி, மதுபானம்.

கல்வி நிறுவனங்கள்

University of the Republic of San Marino முக்கியமான பல்கலைக்கழகமாகும். Advanced School of Historical Studies ஆராய்ச்சிக்குப் புகழ்பெற்றது. சர்வதேச அறிவியல் குழு மூலம் நடைபெறும் இதனை, சர்வதேச ஆய்வு மய்யப் பேராசிரியர் லூசியானோ கேன்ஃபோரா நிருவகித்து வருகிறார். Musical Institute என்ற இசை நிறுவனமும் சர்வதேச அறிவியல் அகாடமியும் (International Academy of Sciences San Marino) உள்ளன. கற்பித்தல் மற்றும் அறிவியல் வெளியீடுகளுக்கு மின் கற்றல் (e-learning) முறையும் பின்பற்றப்படுகிறது.

இத்தாலிய எழுத்தாளர் Umberto Eco இயற்பியல் கட்டமைப்புகள் இல்லாமல் பல்கலைக்கழகத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார்.

சுற்றுலா தலங்கள்

மிகவும் பிரபலமான நகரமாக சான் மரினோ உள்ளது. சான் மரினோ கதீட்ரல் (The Cathedral of San Marino), இடைக்கால பலஸ்ஸோ பப்ளிகோ (Plazzo Publico), ஸ்டேசுவா (Statua) டெல்லா லிபெர்டா உள்பட பியாஸ்ஸா டெல்லா லிபெர்டா, போர்கோ மகியோர் (Borgo Maggiore), குய்டா கோபுரம் (Guita Tower), செஸ்டா கோபுரம் (Cesta Tower), மோன்டலி கோபுரம் (Montale Tower).

- மலர்

Share