Home 2011 நவம்பர் உலக நாடுகள்
புதன், 28 அக்டோபர் 2020
உலக நாடுகள்
Print E-mail

சிம்பாப்வே (Zimbabwe)

  • ஆப்ரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ள நாடு

  • தலைநகர் ஹராரே (Harare)

  • அலுவலக மொழிகளாக ஆங்கிலம், ஷோனா (Shona), டெபேலெ (Ndebele) உள்ளன.

  • நாணயம்: சிம்பாப்வே டாலர்

  • அங்கீகரிக்கப்பட்ட சுதந்திர நாள்: ஏப்ரல் 18, 1980

  • குடியரசுத் தலைவர் : ராபர்ட் முகபே (Robert Mugabe)

  • பிரதமர் : மோர்கன் ட்ஸ்வாங்கிரை (Morgan Tsvangirai)

  • இங்குள்ள வங்கி நிலக்கரி வயல் உலகின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கமாகும்.

ராபர்ட் முகபே

மோர்கன் ட்ஸ்வாங்கிரை

செசில் ரோட்ஸ் என்னும் ஆங்கிலேயரால் கி.பி.1887இல் உருவாக்கப்பட்டது. இவரது

பெயரிலேயே ரொடீஷியா என்றழைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அரசிடமிருந்து 1923இல் நிருவாகத்தை இங்கிலாந்து பெற்றுக் கொண்டது. 1961ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டாலும் வாக்குரிமை வெள்ளையருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

1965 நவம்பர் 11 அன்று பிரதமராக இருந்த கியான் ஸ்மித் தன்னிச்சையாக ரொடீஷியா சுதந்திர நாடு என்று அறிவித்தார். நிரந்தரமான வெள்ளைச் சிறுபான்மையினர் ஆதிக்கத்தை நிலைநாட்டத் திட்டமிட்டார். இதனால், அங்கிருந்த கருப்பு இனத்தவர்கள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்டனர். 1979இல் வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் நடைபெற்ற முதல் தேர்தலில் பிஷப் அபுல் முசோரியின் அய்க்கிய ஆப்ரிக்க தேசியக் கட்சி வெற்றி பெற்றது. 1980 ஏப்ரல் 18 அன்று சட்டப்பூர்வமாக விடுதலை பெற்ற ரொடீஷியா, ஜிம்பாப்வே என்ற பெயரினைப் பெற்றது.

புதிய அரசியல் சட்டத்திற்கான முன்வரைவு ஒரு அவசரச் சட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, எந்தவித நஷ்டஈடும் வழங்காமல் வெள்ளையினத்தினரின் பண்ணைகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் அரசிற்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, சுமார் 800 வெள்ளையினப் பண்ணைகள் கைப்பற்றப்பட்டு, ஏழை சிம்பாப்வே மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

இந்நாட்டின் வடக்குப் பகுதியில்தான் புகழ்வாய்ந்த விக்டோரியா நீர்வீழ்ச்சி உள்ள சாம்பசி நதி ஓடுகிறது.

புவியியல் அமைப்பு

ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது. முழுவதும் நிலத்தால் சூழப்பட்ட நாடு. கிழக்கில் மொசாம்பிக், வடக்கில் சாம்பியா, மேற்கில் போஸ்ட்வானா, தெற்கில் தென்ஆப்ரிக்கா அமைந்துள்ளன.

வேளாண்மை

காபி, புகையிலை, சோளம், வேர்க்கடலை, பருத்தி ஆகியன முக்கிய விளைபொருள்களாகும்.

ஏற்றுமதிப் பொருள்கள்

புகையிலை, சர்க்கரை, துணி, தங்கம், ஆஸ்பெஸ்டாஸ், செம்பு, குரோமியம்.

இறக்குமதிப் பொருள்கள்

கோதுமை, போக்குவரத்துச் சாதனங்கள், பெட்ரோலியம், பெட்ரோலியப் பொருள்கள்

கனிமவளம்

நிலக்கரி, தங்கம், குரோமியம், செம்பு, நிக்கல், ஆஸ்பெஸ்டாஸ்.

கல்வி

ஆரம்பப் பள்ளியில் 9 வருடங்களும் மேல்நிலைப் பள்ளியில் 6 வருடங்களும் படித்த பின்பே அங்குள்ள பல்கலைக்கழகத்திலோ அல்லது பிறநாட்டுப் பல்கலைக்கழகங்களிலோ சேரும் தகுதியை மாணவர்கள் பெறுவர். ஏழு பல்கலைக்கழகங்களுள் யுனிவர்சிட்டி ஆப் சிம்பாப்வே 1952இல் முதலில் கட்டப்பட்ட பெரிய பல்கலைக்கழகமாகும்.

உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளில் சிம்பாப்வே அணியும் ஒன்று.

- மலர்

-

Share