Home 2011 நவம்பர் பிஞ்சுகள் பக்கம்
புதன், 28 அக்டோபர் 2020
பிஞ்சுகள் பக்கம்
Print E-mail

ஆல்கே

ப்ரோட்டிஸ்டா என்ற வகையில் உள்ள ஒரு செல் உயிரியான ஆல்கே மிகச் சிறிய தாவரம். ஆல்கே என்பது ராக்வீட், கெல்ப் லீவெற்றுஸ், டல்ஸ் போன்ற கடல் பாசிகள் ஆகும். இவை 25,000க்கு மேற்பட்ட வகைகளைக் கொண்டவை. ஆல்கேயின் முக்கியப் பிரிவுகளாக குளோ ரோஃபைட்டா, ஃபேயோஃபைட்டா மற்றும் ரோடோஃபைட்டா உள்ளன. மிகப்பெரிய ஆல்கே மேக்ரோ சிஸ்டிஸ் பெரிஃபெரோ ஆகும். அட்லாண்டிக் சமுத்திரத்தின் பரப்பைப் பெரும்பாலும் மூடுவது பழுப்பு நிற ஆல்கே ஸர்காஸஸம் ஆகும்.

பச்சை ஆல்கேயில் மெய்யோஸிஸ் ஸைகோஸ்போரின் உள்ளே நடக்கின்றது. உணவாகப் பயன்படும் சிவந்த ஆல்கே போர்ஃபைரா. ஃப்யூகோக்ஸாந்தின் பழுப்பு நிற ஆல்கேயின் நிறத்திற்குக் காரணம். ஆல்ஜினிக் ஆஸிட் லாமினாரியா என்ற ஆல்கேயிலிருந்து கிடைக்கிறது. அகர் ஜெஸிடியம் ஆல்கேயிலிருந்து கிடைக்கின்றது. அயோடின் முக்கியமாக பழுப்புநிற ஆல்கேயிலிருந்து கிடைக்கின்றது.

ஆல்கே பாசிகள்

தேயிலைச் செடியில் ஒட்டுண்ணியாக வாழும் ஆல்கே செஃபாலரஸ். ஒரு மோட்டைல் கலேனியல் பச்சை ஆல்கே வால்வாக்ஸ் ஆகும். ஃபைக்கோக்கொலாய்ட் ஆல்கிக் ஆஸிட் கெல்ப்களிலிருந்து கிடைக்கிறது. ரிப்பன் வடிவ குளோரோப் லாஸ்ட் உடைய ஆல்கேயின் பெயர் ஸ்பைரோஜிரா.

நவீன நுண்கலைகளில் ஆல்கே சோப், சவரகிரீம், பசைகள், பேப்பர், பிளாஸ்டிக், ஃபிலிம் முதலிய தொழில்களில் பயன்படுகிறது. சாட்டை போன்ற ஃப்லாகெல்லா உடைய சிறிய ஒற்றை செல் பச்சை ஆல்கே யூக்ளினா ஆகும். ஸ்பைரோஜிரா சுருள் வடிவ குளோரோப்லாஸ்ட் உடைய பச்சை நிற பலசெல் ஆல்கே. குளத்து நீருக்குப் பச்சை நிறம் தரும் ஒற்றை செல் பச்சை ஆல்கே குளோரெல்லா. குளத்துப்பட்டு என அழைக்கப்படும் ஆல்கே ஸ்பைரோஜிரா.

இதனைப் போன்று பல்வேறு ஆல்கேகள் பல துறைகளிலும் இடம்பெற்றுள்ளன.

சு.தமிழ்மணி, எட்டாம் வகுப்பு, ஆ பிரிவு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி, நெசவாளர் காலனி, அருப்புக்கோட்டை.


 


பாப்பாவுக்கு....

அப்பா அம்மா அறிவுரைகள்
தப்பாது நீயே கடைப்பிடிப்பாய்!
அப்பா அம்மா உனக்காக
எப்பொ ழுதுமே வாழ்ந்திருப்பார்!

துடிப்புடன் வாழக் கற்றுக்கொள்
படிப்புடன் அன்பைப் பெற்றுக்கொள்!
கடிந்தே பேசாக் கனிமொழியால்
படிந்த பாசமே பனிமலையாம்!

ரா. தேன்மொழி
விருகம்பாக்கம்

புகழச் செய்திடுவாய்!

கதிரோன் வானில் எழுமுன்னே
காலையில் எழுந்து படித்திடுவாய்!
மதியோன் இரவில் வரும்முன்னே
மகிழ்ச்சி பொங்க ஆடிடுவாய்!

பெற்றோர் கூறும் அறிவுரையைப்
பொறுப்புடன் கேட்டு நடந்திடுவாய்!
உற்றார் உறவினர் யாவருக்கும்
உந்தன் தொண்டைப் புரிந்திடுவாய்!

தேசம் காக்க உயிரினையும்
துச்சம் எனவே மதித்திடுவாய்!
பாசம் கொண்ட செந்தமிழைப் பாரும் புகழச் செய்திடுவாய்!
- கோதை,
ஆவடிஅறிவுக்கனிகள்

பக்தி
அறிவாளிக்கு பரம விரோதி
முட்டாளுக்கு பரம்பரை வியாதி

கடவுளுக்கு
இரு விழியும் இல்லை
ஒரு மொழியும் இல்லை

பக்தி
பக்தர்க்கு பாதகம்
எத்தர்க்கு சாதகம்

போதை
பக்திப் பாதையில் போனால்
புத்தி போதையில் புரளும்

அறிவாளிக்கு...
பக்தி துரும்பு
புத்தி கரும்பு

பண்பாடு
பொதுநலம் பகுத்தறிவின் பண்பாடு
சுயநலம் பக்தியின் பண்பாடு

ஒன்றே....
சுவரில் முட்டிக் கொள்வதும்
சிலையிடம் வேண்டிச் செல்வதும்

ஆகாதவை
சகதி சந்தனம் ஆகாது  பக்தி புத்தி ஆகாது

பிடிக்கும்
துதித்து வாழ பலருக்கும்
சிந்தித்து வாழ சிலருக்கும்

- மு. மன்னார் வேலூர்


Share