Home 2011 டிசம்பர் உடல் உறுப்புகளை அறிதல்
புதன், 12 ஆகஸ்ட் 2020
உடல் உறுப்புகளை அறிதல்
Print E-mail

உடலினையே அறிந்திடுவோம்
உடல் உறுப்புகளைத் தெரிந்திடுவோம்
அவை செய்யும் பணிகளையே
அழகாகக் கற்றிடுவோம்

கண்களால் பார்த்திடுவோம்
காதாலே கேட்டிடுவோம்
பார்த்ததையும் கேட்டதையும் பாடமாகப் படித்திடுவோம்

மூக்காலே நுகர்ந்திடுவோம்
முகமெல்லாம் மலர்ந்திடுவோம்
வாயாலே பேசிடுவோம்
வாய்மையை நாம் காத்திடுவோம்

கைகளாலே எழுதிடுவோம்
கால்களாலே நடந்திடுவோம்
கனிவு மிக்க அன்னையை நாம்
கைகளாலே தொழுதிடுவோம்

விரல்களாலே எண்ணிடுவோம்
விடை தனையே கூறிடுவோம்
வீரநடை போட்டு நாமும்
விருப்பமாக பள்ளி செல்லுவோம்

- ப.வனிதா, அருப்புக்கோட்டை

Share