விடுகதை
Print

1. முகத்தின் மேலே கைகள், முள்ளைப் போலே கைகள், ஓடிப்போகும் ஒரு கை, மெல்ல நகரும் மற்றொரு கை! - அது என்ன?

2. அச்சு இல்லாத சக்கரம், அழகு கூட்டும் சக்கரம், விதவித வண்ணச் சக்கரம், விலைக்குக் கிடைக்கும் சக்கரம்! -  அது என்ன?

3. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! - அது என்ன?

4. பார்வைக்குப் பச்சை நிறம், பாக்கு வெற்றிலை போடாமல் வாய் மட்டும் பவள நிறம்! - அது என்ன?

5. கண்ணுக்கு விருந்தாய் கையில் இருக்கும். கருத்துக்கு விருந்தாய் மனதில் ஒலிக்கும். ஞானத்தைச் சுமந்து நமக்குத் தந்தே நல்லபடி வாழ உதவி செய்யும். - அது என்ன?

6. மூவரும் ஒரே முகம். ஒருவர் ஆற்றிலே, இரண்டாமவர் காட்டிலே, மூன்றாமவர் வீட்டிலே. அவர்கள் யார்?

7. பார்த்தவர் 2 பேர், எடுத்தவர் 5 பேர். சாப்பிட்டவரோ ஒரே ஒருவர்! யார் அவர்கள்?

8. பறக்காத பூப்பந்து, பகட்டான சிறு பந்து, எடுத்து வாயில் போட்டால் இனிக்கும் தேன்பந்து. அது என்ன?

9. படீரென்று வெடிக்கும்; பட்டாசு அல்ல. பறந்து விரைந்து போகும்; விமானமுமல்ல. அது என்ன?

10. தண்ணீரிலே பிறந்து தரணியிலே புகுந்து வந்தாள், வானொலியில் பாடுகின்றாள், இருளில் ஒளிருகின்றாள் - அவள் யார்?

 

- விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்

Share