சுவையான செய்திகள் | |||
|
நேர்மையுடன் இருந்தவர்
மற்ற ஆட்சிக்குழுத் தலைவர்கள் அனைவரும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கும் விதமாக, சாக்ரடீசை ஒரு மனதாக முடிவெடுக்கச் சொன்னார்கள். அதிகாரம் கையில் இருக்கிறது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களைத் துன்புறுத்தக் கூடாது என நினைத்த சாக்ரடீஸ், தளபதிகளைக் காப்பாற்றினார். உடனிருக்கும் ஆட்சிக் குழுத் தலைவர்களுக்கு எதிராக, அந்தத் தளபதிகளின் தண்டனையைத் தடுத்து நிறுத்தினார். பொறுப்பிலிருக்கும் பிற தலைவர்கள் கோபம் கொண்டனர். சாக்ரடீசைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி, சிறையில் வைக்கத் தயாராக உள்ளனர் என்று தெரிந்தும் உண்மையின் -_ நேர்மையின் பக்கமே இருந்தார் சாக்ரடீஸ். நம்பிக்கை
இதனைக் கேட்ட சீடன், இந்த மூன்றுள் ஒன்றை விடவேண்டும் என்ற நிலை வந்தால் எதை விடுவீர்கள் என்றதும், போர்க்கருவிகள் என்று கூறியுள்ளார். மற்ற இரண்டினும் ஒன்றை என்றால்... என்றதும், உணவு என்று சொல்லியுள்ளார். விடாத சீடன், உணவு இல்லை என்றால் மக்கள் இறந்து விடுவார்களே என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்.
தியாக உணர்வு
கையில் வாங்கிய தண்ணீரைக் குடிக்கப் போன நேரத்தில் அருகிலிருந்த மற்றொரு வீரன் தீனக்குரலில் குடிக்கத் தண்ணீர் கேட்டுக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்டது. உடனே, என் தேவையைவிட அந்த வீரனின் தேவை முக்கியமானது என்று சொல்லி தனக்குக் கொடுத்த தண்ணீரை அந்த வீரனுக்குக் கொடுக்கச் சொன்னார். வீரன் உயிர் பிழைத்தான். சிட்னி மரணமடைந்தார். சிட்னியின் தியாக உணர்வினைப் பாராட்டிய ஆங்கிலேய அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது. மதிப்பதே நியாயம்
மருத்துவர் ஜென்னர் கொள்ளை நோய் எனப்படும் வைசூரி நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர். எதிரி நாட்டு விஞ்ஞானியை ஏன் மதிக்கிறீர்கள் என்று நெப்போலியனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு, மன்னர்களின் பெருமை போரில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்வதில் இருக்கிறது-. அவர்களால் தாங்கள் அழித்த உயிர்களை மீண்டும் தர இயலாது. ஆனால், டாக்டர் ஜென்னர், வைசூரி நோயால் இறக்காமல் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் சேவையைச் செய்துள்ளார். எனவே, ஒரு மன்னர் விஞ்ஞானியை மதிப்பதுதான் நியாயம் என்ற கூறியுள்ளார் மாவீரன் நெப்போலியன்.
|