நான் பகுத்தறிவுவாதி
Print

எதையும் எனதறிவு கொண்டு முடிவு
செய்கிறேன் ஏனெனில், நான் பகுத்தறிவுவாதி!

எந்தச் சூழலிலும் சுயமரியாதை எனும்
உயிர்க்காற்றை இழக்கமாட்டேன் ஏனெனில், நான் பகுத்தறிவுவாதி!

உண்மை, உழைப்பு, உயர்வு என்பதே
எனது இலக்கு ஏனெனில், நான் பகுத்தறிவுவாதி!

பிறருக்குத் தொண்டு செய்வதில் சிறிதும்
பின்வாங்க மாட்டேன் ஏனெனில், நான் பகுத்தறிவுவாதி!

அய்யாவின் கொள்கை வழி நடந்து,
அறிவுலகம் போற்ற வாழ்வேன் ஏனெனில், நான் பகுத்தறிவுவாதி!

- த.மா.ஓவியா, பழநி

Share