Home 2012 ஏப்ரல் பிஞ்சுகள் பக்கம்
செவ்வாய், 04 ஆகஸ்ட் 2020
பிஞ்சுகள் பக்கம்
Print E-mail

கண்ணின் அமைப்பு

கண் நமது முக்கியப் புலனுறுப்பு ஆகும். இரு கண்களும் மண்டையோட்டின் கண் குழிகளில் அமைந்துள்ளன. கண்கோளம் மூன்று அடுக்குகளால் ஆனது. அவை பின்வருமாறு:

வெளி அடுக்கு (ஸ்கிளிரா):

புறத்தே உள்ள விழிவெளிப் படலமானது கண்ணின் முன்பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் வெண்மை நிறமாகக் காணப்படுகிறது. இப்படலம் விழியின் முன் பகுதியில் ஒளியை ஊடுருவக்கூடிய விழிவெண் படலமாக மாறி காணப்படும்.

நடு அடுக்கு (விழியடிக் கரும்படலம்):

இதில் உள்ள இரத்தக் குழாய்களில் உள்ள இரத்தமானது செறிவுமிக்க அடர்ந்த நிறமிகளைக் கொண்டது. விழியடிக் கரும்படலமானது, விழியின் முன் பகுதியில் சிலியரி உறுப்பினையும், அய்ரிஸ் என்னும் ஒளிக் குறுக்கு அமைப்பினையும், விழிலென்ஸ்சயும் உருவாக்குகிறது. அய்ரிஸ்க்கு நடுவில் கண்பாவை என்ற துவாரம் உள்ளது.

மனிதனின் கண்களில் விழிலென்சு ஒன்று உள்ளது. பொருளின் பிம்பத்தை இந்த விழிலென்சு விழித்திரை மீது விழுமாறு செய்கிறது. விழித்திரை ஒளி உணர்வு நரம்புகளால் சூழப்பட்டுள்ளது. பார்வை நரம்புகள் மூலம் பிம்பத்தை மூளைக்கு எடுத்துச் செல்கிறது.

மனிதனின் கண் வெவ்வேறு பொருள்களின் வெவ்வேறு தொலைவிற்கு ஏற்ப விழிலென்சின் குவியத் தூரத்தை மாற்றி பிம்பத்தை விழச் செய்கிறது.

சீலியரித் தசைகள் சுருங்குவதாலும், விரிவதாலும் விழிலென்சின் குவியத் தூரம் மாற்றம் அடைகிறது. இச்செயலே கண்தக அமைதல் ஆகும்.

குறைபாடற்ற கண்பார்வை கொண்ட ஒருவருக்கு ஒரு பொருளைத் தெளிவாகக் காணக்கூடிய மிகக் குறைந்த அளவு 25 செ.மீ.  ஆகும். இது தெளிவுக் காட்சியின் மீச்சிறு தொலைவு ஆகும். கண்ணால் தெளிவாகக் காணக்கூடிய குறைந்தபட்ச தொலைவு அவரவர் வயதிற்கேற்ப மாறுபடும்.

க.கார்த்திகா, எட்டாம் வகுப்பு, அருப்புக்கோட்டை

வெங்காயம்

  • நீரோ மன்னன் தனது குரல் வளத்துக்காக நாள்தோறும் பச்சை வெங்காயத்தை உண்டு வந்தான்.

  • பிஸினி என்னும் வரலாற்று ஆசிரியர் வெங்காயம் 27 நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையுடையது என்கிறார்.

  • எகிப்தியர்கள் வெங்காயத்தையும், வெள்ளைப் பூண்டையும் தெய்வமாக வணங்கினர். இவற்றின் மீத ஆணையிட்டும் வந்தனர்.

  • ஜாவா, சுமத்ரா போன்ற தீவுகளில் வசிப்பவர் நோயாளிகள் படுத்து இருக்கும் அறைகளில் நச்சுக் கிருமிகளை அழிக்கும் பொருட்டு தினமும் வெங்காயத்தைப் போட்டு வைப்பார்கள்.

செ. ஜெய சிவா, 4ஆம் வகுப்பு ஈ பிரிவு, தூய மரியன்னை ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, மதுரை

கை நாட்டு வந்தது எப்படி?

படிக்காதவர்கள் கையெழுத்துப் போடுவதற்குப் பதிலாக கைரேகையைப் பதிப்பாங்க. ஆனால், படித்தாலும்கூட, சில முக்கிய பத்திரங்களில் கைரேகையை பதிய வைக்கிறாங்க. இது ஏன் தெரியுமா? உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக கைரேகை இருக்கிறது. அது ஒவ்வொரு விரலுக்கும்கூட மாறுபடுகிறது.

அது சரி, முதல்ல இந்தப் பழக்கம் எப்படி வந்ததுன்னு சொல்லவே இல்லைன்னு கேட்கிறீர்களா? அவசரப்படாதீங்க, குட்டீஸ். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன அரசர்கள் கைரேகைகளில் இத்தனை விஷயம் இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டாங்க.

ஸ்ரீ. சூரியநாராயணன், 4ஆம் வகுப்பு ஈ பிரிவு, தூய மரியன்னை ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, மதுரை.

அரிசிக்கு இத்தனை பெயர்கள்

அடிசில், அமலை, அமித்து, அயினி, அமி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொன்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுங்கல், புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ளன.

ம. செந்தில்குமார், 4ஆம் வகுப்பு ஈ பிரிவு, தூய மரியன்னை ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, மதுரை

யார் வயதானவர்?

அம்மா வயதானவரா?மகள் வயதானவரா? அம்மா என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இமய மலையின் மகளான கங்கை நதி வயதில் மூத்தவள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆம், இமயமலை உருவாவதற்கு முன்னறே கங்கை நதி ஓடியிருக்கிறது.

ச. செந்தூரபாண்டி, 4ஆம் வகுப்பு ஈ பிரிவு, தூய மரியன்னை ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, மதுரை

Share