Home 2012 மே பிஞ்சுகள் பக்கம்
திங்கள், 25 ஜனவரி 2021
பிஞ்சுகள் பக்கம்
Print E-mail

ஒரு வரிச் செய்திகள்

 • பெரியார் வனவிலங்குச் சரணாலயம் அமைந்துள்ள இடம் - கேரளா

 • கல்லணையைக் கட்டியவர் -  கரிகால் சோழன்

 • ஒளிமிகுந்த நட்சத்திரம் - சிரியஸ்

 • பிளாஸ்டிக்கைக் கண்டறிந்தவர் - அலெக்ஸாண்டர் பார்க்கஸ்

 • மரபியலின் தந்தை -  சிரிகர் ஜோகன் மெண்டல்

 • ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் கருவி -  ஸ்பைக்மோமானோ மீட்டர்

 • இந்திராகாந்தி அணுசக்தி நிலையம் உள்ள மாநிலம் - தமிழ்நாடு

 • இதயத் துடிப்பை அளவிடும கருவி -  ஸ்டெதஸ்கோப்

 • நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கறுப்பினத் தலைவர் - மார்டின் லூதர் கிங்

 • கலிங்கப் போரின் வெற்றிக்குப் பிறகு புத்த மதத்தைத் தழுவிய மவுரிய அரசர் - அசோகர்


  ம.செந்தில்குமார், நான்காம் வகுப்பு இ பிரிவு, புனித மரியன்னை ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, மதுரை

யார்? எவர்?

ச்சமென்பதை அறியாத    தாத்தா!

சிரியப் பயிற்சிப் பள்ளி அமைத்த    தாத்தா!

னமானத்தோடு வாழத் தூண்டிய    தாத்தா!

கைக் குணம் உடைய    தாத்தா!

லகோர் போற்றும் இனிய    தாத்தா!

ஊர் பல சுற்றிக் கருத்துரைத்த    தாத்தா!

ல்லாருக்கும் எல்லாம் என்ற    தாத்தா!

ற்றமிகு செயல்பல புரிந்த    தாத்தா!

அய் யம் பல அகற்றிய    தாத்தா!

ற்றுமை ஒழுக்கம் விரும்பிய    தாத்தா!

டி    ஓடி உழைத்த அறிவுத் தாத்தா!

அவ் வை போல் அறிவுரை தந்த தாத்தா!

அக் கிரமம் வெறுத்த தாத்தா!

யார்? எவர்?

அவர்தான் நம்
அன்புத் தாத்தா! பெரியார்த் தாத்தா!

ந.தாமரைச்செல்வன், 5ஆம் வகுப்பு, ஸ்டேன்ஸ்போர்டு சர்வதேசப் பள்ளி, புதுச்சேரி

 

பலாப்பழம்

பலாப்பழத்தில் புரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் சி, ரிபோப்பளவின், தயமின் ஆகிய ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன.

சில நோயுள்ளவர்களுக்கு இதன் பழக்கூழ் மிகச்சிறந்த நிவாரணி. இதன் கொட்டைகள் காய்கறியாகவும் வறுத்தும் உட்கொள்ளப்படுகிறது.

பலாப்பழம் அதிக அளவில் உட்கொள்வ தினால் ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவில் நிவர்த்தி செய்யப்படுகிறது. இது தொற்று நோய்க்கும் நச்சுப் பொருட்களுக்கும் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும்.

மு.திருக்குமரன், நான்காம் வகுப்பு இ பிரிவு, புனித மரியன்னை ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, மதுரை

மஞ்சளின் தன்மை


மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி ஆகும். மஞ்சள் பொடி சேர்த்து உண்போருக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புக் குறைவு என்று கூறப்படுகிறது. பாக்டீரியாக்களைப் போல, வைரஸ் எனப்படும் நுண்கிருமிகள், மருந்துகளுக்கு அவ்வளவு எளிதில் கட்டுப்படுவதில்லை. ஆனால், மஞ்சள் அவற்றை கட்டுப்படுத்துகிறது. இதனாலேயே அம்மை நோய்ப்புண் மேல் வேப்பிலையை அரைத்து மஞ்சளுடன் கலந்து பூசுகிறார்கள். புண்களின் மேல் பொடியாகத் தூவினாலோ அரைத்துப் போட்டாலோ புண் எளிதில் ஆறும், கட்டிகள் உடையும்.

வாதம், பித்தம், சிலேத்துமம் எனப்படும மூன்று குற்றங்களையும் போக்கும் தலைவலி, நீர்க்குற்றம், சைனஸ் கோளாறு, காய்ச்சலற்ற வலிகள், ரணம், பூச்சிக் கடிகள், வீக்கம் எல்லாவற்றிற்கும் மஞ்சள் மருந்தாகிறது.

- அலெக்ஸ் பாண்டியன், நன்காம் வகுப்பு ஈ பிரிவு


இந்தியாவில் கரும்பு பயிராகும் இடங்கள்

 

நெல் பயிரைப் போன்றே கரும்பும் நன்செய் வகை. வண்டல் மண், கரிசல் மண் பூமியிலும் வளரும். வெப்பம் அதிகம் இருந்தால் கரும்பின் தரம் உயரும். தீபகற்ப இந்தியாவில் டெல்டாப் பகுதிகளுக்கு மேற்கில் கரும்பை பயிரிடுகின்றனர். தென் குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கரும்பு பயிரிடப் படுகிறது. புறத் தீபகற்ப இந்தியாவில் கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளத்திலும் கரும்பு அதிகமாக பயிராகிறது. உத்திரப்பிரதேசம் இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம் என்றும் அழைக்கப்படுகிறது.

- மு.சோனைவேல், நான்காம் வகுப்பு ஈ பிரிவு

கவிதை மாணவர்களுக்கு...

 

கடலைப் பருக முடியாதென்று
தெரிந்தும் ஓய்வதில்லை சூரியன்
கரையைக் கடக்க முடியாதென்று
தெரிந்தும் ஓய்வதில்லை அலைகள்
முயன்றால் வெற்றி நமக்கென்று
தெரிந்தும் நீ அதனை
தொடங்கவே இல்லையே ஏன்?
நன்றி!

ஏ.பிரட்டி ஏஞ்சல்,ஏழாம் வகுப்பு ஆ பிரிவு,
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்சி -_ 21

Share