பிஞ்சுக் கேள்வி
Print

என் அய்ந்து வயது மகள் கியூபாவுடன் திருச்சி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது கியூபா, " ஏம்ப்பா, நிறைய சுவரில் "அம்மா" என எழுதி இருக்கிறார்கள் எனக் கேட்டாள்?

உடன்  பதில் சொல்லத் தடுமாறினேன். மீண்டும் கியூபா "அப்ப ஆடு, இலை, ஈ  இதெல்லாம்
எப்ப எழுதுவாங்க?", எனக்  கேட்டாள்.

அப்போதும் பதில் சொல்லவில்லை. அய்ந்து வயது குழந்தையின் அரசியல் நகைச்சுவையோ...?

- வி.சி.வில்வம்

Share