பிஞ்சுகள் பக்கம்
Print

ஒரு வரிச் செய்திகள்

பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் -கேரளா

கல்லணையைக் கட்டியவர் கரிகாலச்சோழன்

ஒளிமிகுந்த நட்சத்திரம் சிரியஸ்

மரபியலின் தந்தை கிரிகர் ஜோகன் மெண்டல்

பிளாஸ்டிக்கைக் கண்டறிந்தவர் லியோ ஹெண்ட்ரிக் பாக்லண்ட்

தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் ராஜராஜசோழன்

- தருண்ராஜ், இரண்டாம் வகுப்பு உ பிரிவு, புனித மரியன்னை தொடக்கப்பள்ளி, மதுரை


தெரியுமா உங்களுக்கு?

குழந்தைகள் ஒரு நாளைக்கு 400 முறை வாய்விட்டுச் சிரிக்கின்றனர்

பெரியவர்கள் 15 முறை தான் சிரிக்கிறார்களாம்

பெண்களைவிட ஆண்க ளுக்கு 40சதவீதம் அதிக மாக வியர்க்கும்.

இணையதளத்தின் பிறந்த நாள் 20.10.1967

கம்ப்யூட்டர் மவுசைக் / சுட்டெலி (Mouse) கண்டறிந்தவர் டக்ளஸ் ஏங்கல் பார்ட்

- கார்த்தி, இரண்டாம் வகுப்பு உ பிரிவு,
புனித மரியன்னை தொடக்கப்பள்ளி, மதுரை


நம் உடலுக்குள் வேதிப்பொருள்கள்

நமது உடலில் 20 வகையான வேதிப்பெருள்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்ஸிஜன் அதிகமாகவும் முக்கியமானதாகவும் உள்ளது. இந்த ஆக்ஸிஜனுடன், ஹைட்ரஜன் சேர்ந்து தண்ணீராக உருவாகிறது.

ஒரு மனிதனின் எடையில் ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் கலந்து கொழுப்பு மற்றும் சர்க்கரையை உருவாக்குகிறது.

மேலும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்பு அடங்கியுள்ளது.

நம் உடலினுள் இருக்கும் பாஸ்பரசைப் பயன்படுத்தி 2,000 தீக்குச்சிகளை உருவாக்கலாம்.

- விஷ்ணு ரெங்கன், வகுப்பு இரண்டு உ பிரிவு,
புனித மரியன்னை தொடக்கப்பள்ளி, மதுரை.


வழிகாட்டுவோம்

கடைவீதி

 

செல்லும்போது

வெறுங்கை

வீசிச் செல்லாதே...

உன் கையில்

துணிப் பை

ஒன்றை எடுத்துச் செல்...

இச் செயலை

அனைவருக்கும் துணிவோடு

எடுத்துச் சொல்...

மண்ணுக்கு இரையாகும்

துணிப் பையை

அனைவரும் பயன்படுத்துங்கள்!

மண்ணை இரையாக்கும்

பாலீதின் பைகளை

கண்டிப்பாய் தவிருங்கள்!

நாளைய நம் தலைமுறை

நாளும் நலமாய் வாழ

பெரியாரின் பிஞ்சுகளே

வழிகாட்டி...!

- பா.இளங்கோவன்


Share