Home 2013 ஜனவரி செல்வம்
ஞாயிறு, 04 ஜூன் 2023
செல்வம்
Print E-mail

புத்தரை வழிகாட்டியாக் கொண்ட துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார்.அந்த ஊரின் மிகப் பெரும் பணக்காரர் ஒருவர், ஒருநாள் அவரைச் சந்திக்கச் சென்றார்.

அப்போது பணக்காரர்,  எனது மகிழ்ச்சியையும், செல்வத்தையும் பெருக்கும் வகையில் ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் ஏதாவது எழுதிக் கொடுங்கள்;அது என்னுடைய குடும்பத்தையும், எனது சந்ததியினரையும் வளமாக்கட்டும் என்றார்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டி ருந்த அந்தத் துறவி ஒரு பெரிய தாளில் தந்தை இறப்பான், மகன் இறப்பான், பேரன் இறப்பான் என்று எழுதிக் கொடுத்தார்.

இதனைப் பார்த்த அந்தப் பணக்காரருக்கு கடும்  பெரும் கோபம் வந்துவிட்டது. நான் உங்களி டம் எனது மகிழ்ச்சியையும், செல்வத் தையும் பெருக்கும் வகையில் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை எழுதிக் கொடுக்கச் சொன்னால், மனதைப் பாதிக்கும் வார்த்தைகளை எழுதிக் கொடுக்கிறீர்களே? இது சரியா...? என்று கேட்டார்.

அமைதியாகத் துறவி சொன்னார்:- உனக்கு முன்னர் உன் மகன் இறந்தால், உன் குடும்பம் துயரம்  அடையும். அதே போல் உன் மகனுக்கு முன்னால் உன் பேரன் இறந்து விட்டால் அதைவிடப் பெரும் துயரம் உங்களைச் சூழும். நான் சொன்ன வரிசைப்படி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் இறப்பார்களேயானால் அதுவே இயற்கை. அதுவே சிறந்த செல்வம் மற்றும் மகிழ்ச்சி.

Share