Home 2013 மே கவிதை
திங்கள், 26 அக்டோபர் 2020
கவிதை
Print E-mail

பெண்ணினம்

சமத்துவமாய்

பூத்துக்குலுங்க

பாடுபட்ட

பெரியாரின்

படத்திற்கு - ஒரு

பெண் மொட்டு

மாலையிட்டு

மரியாதை செலுத்துகிறது.

-காரை.புரட்சிமணி
வடவேர்

 


மேகத்தை நேசித்தேன் - மறைந்து விட்டது

 

நிலவை நேசித்தேன் - தேய்ந்து விட்டது

பறவைகளை நேசித்தேன் - பறந்து விட்டன

கல்வியை நேசித்தேன் - என்னை கரை சேர்த்து விட்டது.

கனவு என்பது காலை வரை

கல்வி என்பது கல்லறை வரை.

- அ.பெரியார் செல்வம்
பாலையம்பட்டி

Share