தன்னம்பிக்கையின் ’சிகரம்’
Print


அருணிமா சின்ஹா

உத்திரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் பிறந்தவர் அருணிமா சின்ஹா. வயது 26தான். கையுந்து பந்து (Volly ball) வீராங்கனையான இவர் 2 ஆண்டுகளுக்கு முன் ரயில் பயணத்தின் போது கொள்ளையர்களை எதிர்த்துப் போராடினார்.

அப்போது அந்தக் கொள்ளையர்கள் அருணிமாவை ரயிலில் இருந்து தூக்கி வீசிவிட்டனர். இதனால் தனது இடது காலை இழந்தார். ஆனால், தன்னம்பிக்கையை இழக்கவில்லை. மீண்டும் தனது பயணத்தைத் தொடர முடிவு செய்தார். எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைக்க விரும்பினார்.

கடந்த மே மாதம் எவரெஸ்ட் ஏறி சாதித்தே விட்டார். இதன் மூலம் ஒரு காலை இழந்த ஒருவர் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறியவர் என்ற பெருமையை அருணிமா பெற்றுவிட்டார்.


உலகின் கடுங்குளிர் நகரம்

 

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் யாகுட்ஸ்க் என்ற நகரம்தான் உலகிலேயே கடுங்குளிர் நிலவும் நகரமாம். எந்தக் காலமும் மைனஸ் 40 டிகிரி செல்சியசில் இருக்கும் இந்நகரில் பனிப்பொழிவு தொடர்ந்து இருக்குமாம்.

அதிக அளவாக மைனஸ் 64 டிகிரிவரை குளிர் நிலவியுள்ளதாம். பொது ஆண்டு 1632இல்தான் இந்த நிலப்பகுதி கண்டறியப்பட்டு பின்னர் நகரமானது. தற்போது 2,70,000 மக்கள் இங்கே வசிக்கிறார்கள்.

Share