பொலிவியா (Republic of Bolivia)
Print

தலைநகர்: சுக்ரே (நீதி), லாபாஸ் (நிர்வாகம்)

பரப்பளவு: 10,98,581 சதுர கி.மீட்டர்

அலுவலக மொழி: ஸ்பானிஷ், அய்மாரா

முக்கிய நகரங்கள்: லாபாஸ், சாண்டா, குரூஸ், ஒருரோ.

முக்கிய ஆறுகள்: மெமோர், கிட்டினஸ், பெனி, மாட்ரிடி, டயஸ்.

நாணயம்: பொலிவியானோ

குடியரசுத்தலைவர்: இவோ மொரலஸ் (Evo Morales)

துணைக் குடியரசுத்தலைவர்: அல்வரோ கார்சியா லினெரா (Álvaro García Linera)

அமைவிடம்: தென் அமெரிக்காவின் மத்தியில், நான்கு பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டு அமைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கே பிரேசிலும் தென்கிழக்கே பராகுவேயும் தெற்கே அர்ஜென்டினாவும் தென்மேற்கே சிலியும் மேற்கே பெருவும் அமைந்துள்ளன.

கனிமவளம்: தங்கம், வெள்ளி, செம்பு, ஆன்டிமனி, டங்ஸ்டன். தகரம் உற்பத்தியில் உலகின் இரண்டாமிடத்தில் உள்ளது.

விவசாயம்: நெல், ஓட்ஸ், வாழை, கோதுமை, பார்லி.

தொழில்: ஆடு வளர்ப்பு, பெட்ரோலியம் சுத்திகரிப்பு, உலோகச் சுத்திகரிப்பு, தகரம், நெசவுத்தொழில்.


சைமன் பொலிவர்

சிறப்புச் செய்திகள்: தென் அமெரிக்க விடுதலைவீரர் சைமன் பொலிவரின் பெயரால் இந்த நாடு பொலிவியா என்ற பெயரினைப் பெற்றது. இந்நாட்டின் மேற்கில், மூன்றில் ஒரு பகுதி மலைகளாகவும் மற்ற பகுதிகள் தாழ்நிலங்களாகவும் உள்ளன.

Share