Home 2014 மார்ச் பிரபஞ்ச ரகசியம் - 9
புதன், 20 ஜனவரி 2021
பிரபஞ்ச ரகசியம் - 9
Print E-mail

சூரிய எல்லையில் புதிய உலகம்

- சரவணா ராஜேந்திரன்

நமது சூரியக் குடும்பத்தின் முக்கியமான கோள்களையும் இதுவரை அறிந்திடாத செய்திகளையும் கண்டுகொண்டோம். இப்போது சூரியனின் எல்லைகளைத் தாண்டி கைபர் பட்டையில் உள்ள குறுங்கோள்கள் பற்றி அறியும் முன்பு  பிரபஞ்சத்தின் இயக்கம் பற்றிப் பார்ப்போம்.

சூரியனும் கோள்களும் நமது பிரமாண்ட பால்வெளி மண்டலத்தின் மிகவும் சிறிய பகுதிதான். நட்சத்திரங்களின் உருவாக்கம் மற்றும் கோள்களின் பிறப்பு என்பது மிகவும் சாதாரணமாக நடக்கும் ஒன்று என பேராசிரியர் கரே புல்லர் (Professor Gary Fuller) கூறினார். 1970 வரை பிரபஞ்சத்தைப் பற்றிய பார்வை வேறு.

அதன் பிறகு அசுர வேகத்தில் வளர்ந்த விண்வெளி ஆய்வு அறிவியல் கோட்பாடு வேறு. எடுத்துக்காட்டாக ஒரு மனிதனை எடுத்துக்கொள்வோம். மனிதனின் முழுவதும் தோல் என்னும் வெளிப்பொருளால் மூடப்பட்டுள்ளது. அதன் உள்ளே பல்வேறு உறுப்புகளும் பாகங்களும் தனித்தனியாக உள்ளன. அவற்றின் பணிகள் வேறுவேறாக இருப்பினும், அனைத்திற்கும் கட்டளை மய்யம் உண்டு, எல்லாம் இயங்கத் தேவையான சக்தி என்பது அவசியமானது. இதே கொள்கை நமது பிரபஞ்சத்திற்கும் பொருந்தும்.

வேதியியல் பிரிவில் அணு அட்டவணை என்று ஒன்றைப் படித்திருக்கிறோம். ஒர் அணுவுடன் மற்றொரு அணு சேர்ந்தால் என்ன உருவாகும் என்பதையும் நமது ஆசிரியர்கள் விளக்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, ஹைட்ரஜன் என்றால் அங்கு ஒரு அணு மாத்திரமே இருக்கும். ஆக்சிஜன் 8 அணுக்கள் கொண்டது. (தனிம அட்டவணையைக் காண்க)

இவ்வாறாக அணுத்திரள் ஒன்று சேரும் போது அதன் நிறை, அணுக்களின் எண்ணிக்கை மேலும் அவற்றின் குணங்களைப் பொறுத்து நம் அறிவியல் அறிஞர்கள் தரம் பிரித்துள்ளனர். இந்த அணுத்திரள்களின் கூட்டம்தான் நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம்.

நமது பிரபஞ்சம் அணுத்திரளின் இயக்கவியலின்படிதான் இயங்குகிறது. இதனடிப்படையில் பிரபஞ்சம் பற்றிய பல இரகசியங்களை நாம் தூரகோள்களுக்குச் செல்லாமல் ஆய்வகத்தில் இருந்தபடியே துல்லியமான முடிவுகளைப் பெற்று அவற்றின் குணாதிசயங்களை அறிந்து கொள்கிறோம்.

கடந்த ஆண்டு பள்ளி கோடைக்கால சிறப்பு வகுப்பில் வானியல் பற்றிய பாடம் நடத்தியபோது ஒரு குழந்தை, நாம் அடுப்பின் அருகில் நிற்கும்போது நம்மால் வெப்பத்தைத் தாங்க முடிவதில்லை, அப்படி இருக்க, எப்படி சூரியனைப் பற்றி இவ்வளவு விளக்கமாகக் கூற முடிகிறது.

இதெல்லாம் யூகத்தின் மூலமாகக் கூறுகின்றார்களா? என்று கேட்டார். உண்மையில் பலருக்கு இந்தக் கேள்வி எழும். வெப்பமில்லாத கோள்களில் இறங்கி அல்லது அதன் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்கள் மற்றும் ஆய்வுக்களங்கள் மூலம்  சுற்றியோ அதன் தரைத்தளத்தில் இறங்கியோ  அவற்றைப் பற்றிய பல தகவல்களை அறிந்து வருகிறோம். சூரியனையும் அதைத் தாண்டியும் உள்ள பகுதிகளைப் பற்றி அறிய தனிம அட்டவணை நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக உள்ளது.

ஓர் அணுவைக் கொண்ட ஹைட்ரஜனுள்  அடங்கியுள்ள ஆற்றல் அளப்பரியது. சூரியனில் ஹைட்ரஜன் அணுக்களின் பிளவின் காரணமாக ஏற்படும் வெப்பம்தான் நாம் உணரும் சூரிய ஆற்றலாகும். அணுக்களின் உதவியால்தான் நமது புவியின் உயிர் வளர்ச்சி சாத்தியமானது. ஹைட்ரஜன் அணுக்கள் பிளவின்போது வெப்ப ஆற்றல் மூலம் போட்டான்கள் வெளியேற்றப்படுகிறது.

புவியின் ஆரம்ப காலத்தில் பெருங்கடலில் உருவான நுண்ணுயிரிகள் இந்த போட்டான்களின் உதவியால்தான் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராணவாயுவை வெளியேற்றியது. இதன் காரணமாகத்தான் இந்தப் பூமி உயிர்கள் வாழும் உலகமாக மாறியது.

இந்த போட்டானின் உதவியால்தான் நாம் சூரிய ஒளியை மின்னாற்றலாக மாற்றி சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு மின்சாரம் தயாரிக்கிறோம். கண்ணாடித் தகடுகளில் சூரிய வெப்பத்தைப் (போட்டான்) பெற்று அதை எளிதில் மின்னேற்றம் பெறும் எலக்ட்ரான்களைக் கொண்ட டைட்டானியம் தகடுகள் இடையில் செலுத்தும்போது மின்னேற்றம் பெற்ற எலக்ட்ரான்கள் மின்னாற்றலாக மாறுகிறது. இவற்றை நாம் மின்கலன்(பாட்டரி)களில் சேமித்து வைத்தோ அல்லது நேரடியாகவோ பயன்படுத்துகிறோம்.

இந்த அறிவியல் தொழில்நுட்பம் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நவீன காலத்தில் அறிவுத்திறன் மூலம் கண்டறியப்பட்ட ஒன்று. ஆனால் இதே போட்டான்கள்தான் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாய் உள்ளது.

நமது சூரியக் குடும்பத்தின் எல்லையைக் கடந்த பிறகு உள்ள வெற்று இடைவெளி என்பது போட்டான், காமா, பிளாஸ்மா, எக்ஸ்ரே கதிர்களால் நிறைந்துள்ளது.. இந்தக் கதிர்கள் மாத்திரமின்றி இதர நட்சத்திரங்களில் இருந்து வரும் இதுவரை கண்டறியப்படாத ஆற்றல் கொண்ட கதிரியக்க சக்திகளும் நிறைந்திருக்கின்றன.

ஒருவேளை மனிதர்கள் சூரியனின் எல்லையைக் கடந்து வெற்றுவெளியில் பிரவேசிக்கும் போது இந்தக் கதிர்களைச் சமாளிக்கும் ஆற்றல் அவசியமானதாகும். இந்தக் கதிர்களிலிருந்து தன்னைப் பாதுகாத்து நமது சூரிய எல்லையைக் கடக்க இன்னும் 100 அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகள்  ஆகலாம். வெற்று வெளியின் கதிரியக்க அபாயங்களைப் பற்றி அறிய சூரியக் குடும்பத்தின் எல்லையில் உள்ள கோள்கள் பெரிதும் உதவுகின்றன.

கைபர் பட்டை

பெருங்கடலில் உருவான நுண்ணுயிரிகள் இந்த போட்டான்களின் உதவியால்தான் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராணவாயுவை வெளியேற்றியது. இதன் காரணமாகத்தான் இந்தப் பூமி உயிர்கள் வாழும் உலகமாக மாறியது.

நமது கோள்களின் இறுதியில், அதாவது சூரியக் குடும்பத்தின் எல்லையில் கைபர் பட்டை என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில்தான் பல குறுங்கோள்கள் நமது சூரியனை ஒழுங்கற்ற வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. ஆரம்ப காலங்களில் நமது கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கோள்கள் அதிநவீன தொலைநோக்கி கொண்டு பார்க்கையில் நமக்குப் புலனாகின்றன. இதுவரை நமது அறிவியலாளர்கள் நான்கு குறுங்கோள்கள் பற்றி அறிந்துள்ளனர்.

அவையாவன: செரஸ், ஹௌமியா, மேக்மேக், ஏரிசு. இந்தக் கோள்களின் குணாதிசயங்கள் நமது கோள்களைப் போன்று இல்லாவிட்டாலும், இவை சூரியனைச் சுற்றி வருவதால் இவற்றைக் குறுங்கோள்கள் என்று அழைக்கிறோம். இதில்  ஹௌமியா, மேக்மேக், ஏரிசு போன்றவை கைபர் பெல்ட் என்னும் பகுதியில் சுற்றி வருகின்றன, இந்தப் பகுதியில் புளுட்டோவும் வருகிறது.

புளுட்டோவின் குணாதிசயங்களும் குறுங்கோள்களைப் போன்று காணப்படுவதால் புளுட்டோவை கோள்கள் அட்டவணையிலிருந்து 2006-ஆம் ஆண்டு நீக்கிவிட்டனர். பூமியிலிருந்து புளுட்டோ குறைந்தது 430 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புளுட்டோ அவ்வளவு தொலைவில் உள்ளதால் அது சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றது. நாசா 2006-ஆம் ஆண்டு ஜனவரியில் நியூஹொரைசன்ஸ் என்ற விண்கலத்தை ஏவியது.

இந்த விண்கலம் 2015ஆம் ஆண்டு ஜூலை புளுட்டோவை நெருங்கி படம் பிடித்து அனுப்பும். கைபர் பட்டையில் உள்ள முதல் குறுங்கோள் புளுட்டோ ஆகும். அதன் பிறகு இதர குறுங்கோள்கள் வருகின்றன. இதனடிப்படையில் நமது கோள்களின் அட்டவணையிலிருந்து விலக்கப்பட்டாலும் இது குறுங்கோள் கூட்டத்தின் தலைவராக பார்க்கப்படுகிறது.

காரணம், புளுட்டோவில் அய்ந்து சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடுத்த தொடரில் நமது சூரியக் குடும்பத்தின் இறுதிக் கோளான யுரேனஸ், நெப்டியூன் கோள்களை அறிந்து கொண்டு கைபர் பட்டையைக் கடந்து வெற்றுவெளியில் பிரவேசிப்போம்.

Share