உலக நாடுகள்
Print

பிரிட்டானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்(British Indian Ocean Territory)

தலைநகரம்: டியகோ கார்சியா (Diego Garcia)

ஆட்சி மொழி: ஆங்கிலம்

பரப்பளவு: 21,004 சதுர மைல்கள்

தண்ணீர்: 99.89 சதவிகிதம்

அரசி: இரண்டாம் எலிசபெத்

ஆணையாளர்: பீட்டர் ஹயீஸ் (Peter Hayes)

நிர்வாகி: ஜான் மெக்மனுஸ் (John Mcmanus)

நாணயம்: பிரிட்டானிய பவுண்ட்

அமைவிடம்: பிரிட்டானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அல்லது சாகோசு தீவுகள் தான்சானியா மற்றும் இந்தோனேஷியா இடையே இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அய்க்கிய நாடு ஆகும். இது, சாகோஸ் தீவுக் கூட்டத்தின் 6 பவளத் தீவுகளைக் கொண்ட பகுதியாகும்.

சிறப்புச் செய்தி: 55 தீவுகளில் பெரிதான டியகோ கார்சியாவில் அய்க்கிய அரசும் அய்க்கிய அமெரிக்க நாடுகளும் இணைந்து நடத்தும் இராணுவத் தளம் உள்ளது. இங்கிருக்கும் தீவுகளுள் ஒன்றான சாகோஸ் அர்சிபெலகோ என்ற தீவினை 16ஆம் நூற்றாண்டில் வாஸ்கோடாகாமா கண்டறிந்தார்.

Share