அன்பை வெளிப்படுத்திய இளவரசர் எட்வர்ட்
Print

வேல்ஸ் இளவரசர் எட்வர்ட்  1914ஆம் ஆண்டில் நடைபெற்ற  முதல் உலகப் போரில் கலந்துகொள்ளச் சென்றார். அவரது படைத்தளபதி லார்ட் கிச்சினர் வேண்டாம் எனத் தடுத்தும் கேட்காமல் போர்க்களம் சென்றார்.

பின்னர், போரில் காயமடைந்தவர் களைக் காண பிரான்ஸ் சென்றார். இளவரசர் எட்வர்டின் வருகையைக் கண்ட மருத்துவர், காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த போர் வீரர் ஒருவரை வேறொரு அறைக்கு மாற்றி எட்வர்டின் கண்ணில் படாமலிருக்கும்படி வைத்துவிட்டார்.

மறைத்து வைத்த படுக்கையைக் கண்ட இளவரசர் எட்வர்ட், இது என்ன? என்றதும், அந்தப் போர்வீரனின் விகாரமான முகத்தைப் பற்றிக் கூறினார். விரைந்து சென்று அந்த வீரனின் முகத்திலிருந்த திரையை விலக்கிப் பார்த்த மன்னர் போரில் முகத்தில் ஏற்பட்டிருந்த காயங்களைப் பார்த்து, அந்த வீரனின் முகத்துடன் தன் முகத்தினை வைத்து அன்பினையும் - நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Share