வெள்ளி
Print

தூய்மையான வெள்ளி பளபளப்பான வெண்மை நிறமுடையது. லத்தீன் பெயராகிய Argente என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்தது. இதன் அறிவியல் குறியிடு Ag. ஒரு கிராம் எடையுள்ள வெள்ளியை 2 கி.மீட்டர் தூரம் வரை கம்பியாக இழுக்க முடியும்.

கரிமானத்தை எதிர்க்கும் திறன் கொண்டதால் பல பொருள்களுக்கு வெள்ளிப் பூச்சாகப் பயன்படுகிறது.

மெல்லிய தகடாகும் திறனுடையது. 0.00003 செ.மீ. கனமுடையதாக மாற்ற முடியும்.

நம் நாட்டில் வெள்ளிச் சரிகையில் புடவைகளும் வேட்டிகளும் நெய்யப்படுகின்றன.

செயற்கை மழை பெய்விக்க சில்வர் அயோடைடு பெரிதும் பயன்படுகிறது. இதனை வின்சென்ட் செப்பர் என்ற அறிஞர் ஆய்ந்து கண்டுபிடித்தார்.

வெள்ளியை அதிகம் உற்பத்தி செய்வதில்  மெக்சிகோ. அமெரிக்கா, கனடா, பெரு, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

புகைப்படங்கள் எடுக்க வெள்ளி புரோமைடு கலவை பெரிதும் பயன்படுகிறது. இதனை, தாகுரி  என்ற பிரான்ஸ் நாட்டுப் புகைப்படக் கலைஞர் 1839ஆம் ஆண்டு கண்டறிந்தார்.

ஒரே ஒரு நாடு வெள்ளி என்ற உலோகத்தின் பெயராலே அழைக்கப்படுகிறது. அது அர்ஜென்டினா. அர்ஜென்டினா என்ற லத்தீன் சொல்லுக்கு வெள்ளி என்று பொருள்.

தங்கத்திற்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ள உலோகம் வெள்ளி.

தங்கத்துடனும் ஈயம், தாமிரம், துத்தநாகம் ஆகியவற்றின் தாதுக்களுடன் வெள்ளி இணையும்.

தூய வெள்ளியுடன் தாமிரம் சேர்த்து கடினத் தன்மையாக்கி நாணயங்கள், ஆபரணங்கள், அழகுசாதனப் பொருள்கள் செய்கின்றனர்.

பிற உலோகங்களுடன் கலந்து கலப்பு உலோகமாகவும், தங்கச் சுரங்கங்களில் தங்கம் எடுக்கும்போது சுத்தமான தங்கத்தைப் பிரித்த பிறகு வெள்ளி ஒரு துணைப் பொருளாகவும் கிடைக்கிறது.

துணைப் பொருளாக வெள்ளி கிடைக்கும் சுரங்கங்களில் வேல்ஸ், கொலம்பியா, பர்மா போன்ற நாடுகளில் உள்ள சுரங்கங்கள் புகழ் பெற்றன.

பெரும்பாலும் வெள்ளி சயனைடு ஆகவும், வெள்ளிக் குளோரைடாகவுமே கிடைக்கிறது.

வெள்ளி சல்பைடு அர்ஜன்டைட் என்றும், வெள்ளி குளோரைடு கொம்பு வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.

சோடியம் சயனைட் திரவத்துடன் கரைக்கப்படும் வெள்ளித் தூள் கலவையில் துத்தநாகம் சேர்த்து சில வேலைகள் செய்து வெள்ளி தனியாகப் பிரித்து எடுக்கப்படுகிறது.

உயர் அளவு மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தும் தன்மையைப் பெற்றிருந்தாலும், அரிய உலோகம் என்பதால் மின்சாரக் கம்பிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை.

ஆர்ஜிரல் என்ற வெள்ளியும் புரதமும் கலந்த மருந்து கிருமிகளை ஒழிக்கும் தன்மையுடையது. காது, மூக்கு, தொண்டை நோய்களைக் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது.

Share