அறிந்து கொள்வோம்!
Print

பாட்டில் படகு

உலகின் தற்போதைய முதன்மைச் சிக்கல் சுற்றுச்சூழல் கேடு. இச்சிக்கலிலிருந்து விடுபட குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி பல நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றன.

அதிகமாக வீணாகும் பிளாஸ்டிக் பொருட்களால் சூழல் கேடு ஆகாமல் இருப்பது அவசியம். இதனைச் சரியாகச் செயல்படுத்தி உள்ளனர் பிஜி தீவு மக்கள்.

பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை நன்கு கழுவி காற்றுப்புகாதபடி மூடி அதனை ஒருங்கிணைத்து படகு கட்டி அதில் பயணம் செய்கிறார்கள்.


பாடம்

 

இன்று காலை ஸ்கூல் போகும் அவசரத்தில் என் பையன் போகோ டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தான். அதிலே ஒருவர் ஒரு காகிதம் மற்றும் அட்டைகளைக் கொண்டு ஏரோப்ளேன் செய்து அதிலே சின்ன மோட்டார் பொருத்தி அதனைப் பறக்க விட முயற்சி செய்து கொண்டிருந்தார்.

நட்ராஜும் அதை மிக ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருந்தான். பின்னர் அந்த ஏரோப்ளேன் பறந்து போய் 150 மீட்டரில் கீழே விழுந்து விட்டது.

உடனே என் மனைவி அவனிடம், இத்தனை கஷ்டப்பட்டு செஞ்சு அது போய் 150 மீட்டரில் விழுந்துடுச்சு பார்த்தியா? இதுக்குதான் இத்தனை மெனக்கெடணுமா? என்றார்கள்.

அதற்கு என் மகன் நட்ராஜ் இல்லம்மா, எத்தனை மீட்டரில் விழுதுன்னு பார்க்க செய்யலை அதை. அது எத்தனை மீட்டர் பறக்குதுன்னு பார்க்க தான் செஞ்சாங்க என்றான்.

சில சமயம் குழந்தைகள் கிட்டே இருந்துகூட நல்ல பாடங்கள் கற்கிறோம்! Be possitive....

- அபி அப்பா

Share