பள்ளிக் கூடம் திறந்தாச்சு பாடப் புத்தகம் கிடைத்தாச்சு! துள்ளிக் குதித்து நாள்தோறும் பள்ளி செல்வோம் தோழர்களே!
காலை நேரம் படித்திடலாம் கல்வியில் தேர்ச்சி அடைந்திடலாம்! மாலை நேரம் ஓடிடலாம் மகிழ்வாய் உடலைப் பேணிடலாம்!
ஒழுக்கம் என்பதை மூச்சாக உண்மை என்பதைப் பேச்சாக பழக்க மாக நாம்கொண்டால் பெரியார் போல வாழ்ந்திடலாம்!

பள்ளிக் கூடம் திறந்தாச்சு பாடப் புத்தகம் கிடைத்தாச்சு! துள்ளிக் குதித்து நாள்தோறும் பள்ளி செல்வோம் தோழர்களே!
அழகுதாசன், சுந்தராபுரம்
|