Home 2014 ஆகஸ்ட் தூய்மை... ஒழுங்கு... சிங்கப்பூர்! (2) - (ஒரு பெரியார் பிஞ்சின் பயண அனுபவம்)
செவ்வாய், 27 அக்டோபர் 2020
தூய்மை... ஒழுங்கு... சிங்கப்பூர்! (2) - (ஒரு பெரியார் பிஞ்சின் பயண அனுபவம்)
Print E-mail

-ச.அன்பு

நண்பர்களே சென்ற முறை ஈஸ்ட் கோஸ்ட் பீச், மீன் பண்ணை (Fish form), நீச்சல் குளம், மெர்லயன் பூங்கா, செந்தோசா பற்றியெல்லாம் சொல்லி இருந்தேன் அல்லவா?

இப்பொழுது நான் இன்னும் சில  புதிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். இன்றைய நாளில் அறிவியலே தலைமை நம் வாழ்விற்கு.

எனவே, நான் அறிவியல் மய்யம் (Science Centre) என்னும் மய்யம் காண சென்றேன். உள்ளே சென்றதும் எங்களை வரவேற்றது எது தெரியுமா? ஒரு பெரிய ரோபோ (Robot) டைனோசர் ஒன்றுதான். மெல்லிய சத்தம் இட்டுக் கொண்டே அது கீழும், மேலும் தானாக இயங்கிக் கொண்டு இருந்தது. அதே உற்சாகத்துடன் நான் உள்ளே சென்றேன். அதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

அங்கே விதவிதமான தனித்தன்மை வாய்ந்த தனித்தனி ஆய்வுகள் பரவியிருந்தன. நான் ஒவ்வொன்றிற்கும் சென்று ஆய்வு செய்து பார்த்தேன். மேஜிக் மிரர் (Magic Mirror) என்ற ஆய்வில் நாம் ஒரு பட்டனை அழுத்த அழுத்த நம் முகம் வெவ்வேறு மாதிரியான முக பாவனைகளையும், அலங்காரங்களையும் காட்டியது.

எனக்கு அது மிகவும் பிரமிப்பாக இருந்தது. என்னைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். பிறகு, ஒரு பெட்டி போன்ற அமைப்பில் உள்ள ஒரு அறையில் சென்று கண்ணாடி வழியாகப் பார்த்தேன். என்னை வெளியில் இருந்து பார்த்தால் என் பாதி உடம்பு மட்டுமே தெரியும்படியாக வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. மீதி உடம்பு எங்கோ மறைந்துள்ளது போல இருந்தது. அறிவியல் செய்த மேஜிக் அது.

ஒரு கண்ணாடி லேசர் உருவத்தை எதிர்ப்புறமுள்ள மற்றொரு கண்ணாடியை லேசாகத் திருப்பினால் தெரிந்தது.

என் ஒரு கையை ஒரு சட்டம் போன்ற அமைப்பில் உள்ள பெட்டி வழியே கைவிட்டேன். முன் வந்து நி-ன்று என்னைப் பார்த்தால் என்னுடைய அந்தக் கை உடைந்து வளைந்தது போலத் தெரிந்தது. அது எனக்கு வியப்பாக இருந்தது.

இன்னும் இருக்கிறது.. பலப்பல விந்தைகளைப் பார்க்க ஆவலாக உள்ளே சென்றேன்.

அங்கே சத்தத்திற்காக தனிப்பட்ட ஆய்வுக்கூடம் இருந்தது. உள்ளே உள்ள ஒவ்வொன்றும் சத்தத்தினால் ஏற்படும் அதிர்வுகளையும், அலைகளையும் வித்தியாசமாக எடுத்துரைத்தது. எப்படி அது இயங்குகிறது.

நான் வேகமாகக் கத்தினால் அளவினைத் துல்லியமாக அளக்கும் ஒரு மானியை வைத்து என் சத்தத்திற்கு ஏற்ப ஒரு குண்டு மேலே சென்று வந்தது.

மெல்லிய குரலில் பேசினால் அதன் அளவு குறைந்ததைப் பார்க்கப்பார்க்க நல்ல வேடிக்கை.

காலின்ஸ் ஜல்லிக் கற்கள் கொண்ட அறையில் சத்தம் ஏற்படுத்தி அதிக சத்தம் ஏற்படுத்தினால் விளக்கு எரியும் முறையை வைத்திருந்தார்கள்.

ஒரு கட்டையில் ஒவ்வொரு இடத்தில் அழுத்தினால் ஒவ்வொரு விதமான ஒலிகளை எழுப்பி இசை போன்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள்.

பல்வேறு ஒலிகளின் ஆய்வுகளை அங்கே காட்சி போன்று ஏற்பாடு செய்து அதில் ஆய்வுகளை நிகழ்த்திக் காட்டினார்கள். இந்த ஒலிகளுக்குள் இத்தனை நிகழ்வுகளா? என்று வியந்து போனேன்.

அறிவை வளர்க்க இன்னும் ஏராளம் இருக்கிறது அந்தக் காட்சியகத்தில்! இவற்றையெல்லாம் தாண்டி எனக்கு ரொம்பப் பிடித்தது சிங்கப்பூர் மக்களின் ஒழுங்கும், தூய்மையும் தான்! முட்டிமோதாமல், விதிகளையும் மீறாமல் அழகான வாழ்க்கை! மற்றவர்கள் பின்பற்றுகிறார்களா என்று கவலைப்படாமல், அதை நாமும் இங்கே பின்பற்ற வேண்டும் வழிகாட்டவேண்டும் என்று உறுதிகொண்டேன். பின்பற்றுவேன்.

Share