உலக நாடுகள் - கோமோரோஸ்(COMOROS)
Print

தலைநகரம்: மோரோனி

பரப்பளவு: 863 சதுர மைல்

அலுவலக மொழிகள்: கோமோரியன், அரபு, பிரெஞ்சு

குடியரசுத் தலைவர்: இகிலிலோ தோய்நைன் (Ikililou Dhoinine)

துணைக் குடியரசுத் தலைவர்: போய்டு முகமது அலி சோலி (Fouad Mohamed Ali Solih)

நாணயம்: கோமோரியன் ஃப்ரான்க்

அமைவிடம்: கோமோரோஸ் ஒன்றியம் இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் வட மடகாஸ்கருக்கும் வடகிழக்கு மொசாம்பியாவுக்கும் இடையே அமைந்துள்ள தீவுகளாலான நாடு ஆகும். மொசாம்பிக், மடகாஸ்கர், சிசெல்ஸ், தன்சானியா  போன்றன கோமோரோசுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகளாகும்.

சிறப்புச் செய்திகள்:
பரப்பளவின்படி ஆப்பிரிக்காவின் மூன்றாவது சிறிய நாடும், மக்கள்தொகை அடிப்படையில் ஆறாவது சிறிய நாடும் ஆகும். எனினும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்தி கூடிய நாடுகளில் கோமோரோசும்  ஒன்றாகும். அரபு மொழியில் சந்திரனைக் குறிக்கும் சொல்லான கோமார் என்பதிலிருந்து கோமோரோஸ் என்ற பெயர் தோன்றியுள்ளது. 2002ஆம் ஆண்டுக்கு முன்புவரை கோமோரோசு இஸ்லாமியக் கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டது.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் நிலவுவதுடன், இங்குள்ள மக்களின் பேச்சுவழக்கில் அதிகமான தமிழ்ச் சொற்கள் இடம் பெறுகின்றன. எந்த இடத்தில் ஊற்றுத் தோன்றினாலும் அது நன்னீர் ஊற்றாக உள்ளது இந்நாட்டின் சிறப்பாகும்.

Share