Home 2015 ஜனவரி உலக அளவில் சாதித்த பிஞ்சுகள்
சனி, 10 ஜூன் 2023
உலக அளவில் சாதித்த பிஞ்சுகள்
Print E-mail

உலக அளவில் நடைபெறும் ரோபோட் போட்டிகள் கடந்த 11 ஆண்டுகளாக ரஷ்யாவில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டி அக்டோபர் மாதம் ரஷ்யாவில் உள்ள கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது.

62 நாடுகளைச் சேர்ந்த 367 அணிகள் கலந்து கொண்ட போட்டியானது 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 13 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என மூன்று பிரிவாக நடத்தப்பட்டது. இதில் 13 முதல் 16 வயதுப் பிரிவில் இந்தியாவிலிருந்து 15 அணிகள் கலந்து கொண்டன. அதில் சென்னையைச் சேர்ந்த மாணவர்களான ஆரோக்ஜோ, மேதேஷ்வர், சிவமாணிக்கம் ஆகியோர் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளனர்.

ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள டெக்னாலஜி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும், முதல் பரிசை ஜப்பானும் இரண்டாம் பரிசைத் தாங்களும் பெற்றுள்ளதாக மகிழ்ச்சியுடன் மூவரும் கூறியுள்ளனர்.

மேலும், தாங்கள் உருவாக்கிய ரோபோட் செவ்வாய்கிரகத்தில் திடப்பொருள், திரவப்பொருள், வாயுப் பொருள் ஆகியவற்றை மாதிரிகளாகச் சேகரிக்கும் திறன் கொண்டது. கரடுமுரடான செவ்வாய்கிரகத்தின் தரைப்பரப்புக்கு உகந்த சக்கரங்கள் ரோபோட்டில் பொருத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர்கள் இயங்க சூரிய ஒளி தேவைப்படுகிறது. இருளான பகுதிகளுக்குள் ரோவர் செல்லும் வகையில் காற்றாலை சக்தியையும் பயன்படுத்தியுள்ளோம். எனவே, தங்குதடையின்றிச் செயல்படும்.

பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்குமிடையே சமிக்சை (சிக்னல்) அனுப்புவதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்த்து ரோபோட்டைத் தானாகச் செயல்படுத்திக் காட்டினோம், பரிசு கிடைத்துள்ளது என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

Share